/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பலாத்கார வழக்கை வாபஸ் பெற மறுத்த குடும்பங்கள்: ஊரை விட்டு ஒதுக்கி வைப்புபலாத்கார வழக்கை வாபஸ் பெற மறுத்த குடும்பங்கள்: ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
பலாத்கார வழக்கை வாபஸ் பெற மறுத்த குடும்பங்கள்: ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
பலாத்கார வழக்கை வாபஸ் பெற மறுத்த குடும்பங்கள்: ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
பலாத்கார வழக்கை வாபஸ் பெற மறுத்த குடும்பங்கள்: ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
ADDED : ஜூலை 25, 2011 09:55 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பலாத்கார வழக்கை வாபஸ் வாங்க மறுத்த ஒன்பது குடும்பங்கள், மூன்று ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
முதுகுளத்தூர் மகிண்டி ஊராட்சிக்கு உட்பட்ட சூரங்குளத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகளை, அப்பகுதியை சேர்ந்த பாலதண்டாயுதபாணி பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக, கீழத்தூவல் போலீசில், 2007ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடனே புகாரை வாபஸ் பெறக்கோரி, அவ்வூரை சேர்ந்த பூபதி மணி தலைமையில் பஞ்சாயத்து பேசப்பட்டது. ஆனால் பாண்டியன், புகாரை வாபஸ் வாங்க மறுத்தார். இதனால், அவருடன் சேர்ந்த எட்டு குடும்பங்களை, அன்று முதல் ஊரை விட்டு ஒதுக்கி வைக்க முடிவு செய்யப்பட்டது. கோயில் திருவிழாக்களில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.
இது குறித்து பாண்டியன் கூறியதாவது: எங்களிடம் ஊர் வரி, கோயில் வரி வசூலிப்பதில்லை. நாங்கள் சாமி கும்பிட சென்றால், கோயிலை பூட்டி விடுகின்றனர். இதனால், திருமணம் போன்ற சுப காரியங்கள் நடத்த முடியாமல் சிரமப்படுகிறோம். வரி வசூலிக்காததால், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தர மறுக்கிறார்கள், என்றார். பின்னர் இவர், கலெக்டர் அருண்ராயிடம் மனு கொடுத்தார். சூரங்குளத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், 'யாரையும், எதற்காகவும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கவில்லை,'' என்றார்.