/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவி அதிமுக., - திமுக., கடும் மோதல்செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவி அதிமுக., - திமுக., கடும் மோதல்
செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவி அதிமுக., - திமுக., கடும் மோதல்
செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவி அதிமுக., - திமுக., கடும் மோதல்
செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவி அதிமுக., - திமுக., கடும் மோதல்
கடையநல்லூர் : செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக., - திமுக., வேட்பாளர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ''செங்கோட்டை நகராட்சியினை பொறுத்தவரை தொடர்ந்து பல ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் காணப்படாத நிலைதான் இருந்து வருகிறது. கல்வி, பொருளாதாரம், போக்குவரத்து, சுகாதாரம் போன்ற எவையும் மேன்மையடையவில்லை. இந்த நகராட்சியை பொறுத்தவரை சென்னையை போன்று சுத்தமான நகராட்சியாக உருவாக்கிட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
செங்கோட்டை நகராட்சியை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் முதன்மை பெற்ற நகராட்சியாக மாற்றுவது மட்டுமின்றி தமிழகத்தில் மாடல் நகராட்சி என்ற அந்தஸ்து செங்கோட்டைக்கு கிடைக்கும் வகையில் பணிகள் இருக்கும். செங்கோட்டை வாரச்சந்தை முற்றிலும் புனரமைப்பு செய்யப்பட்டு தினசரி மார்க்கெட் போன்று உருவாக்கப்படும். இப்பகுதியில் உள்ள ஒருவழிப்பாதை முழுமையாக செயல்படுத்தப்படும்.
தாமிரபரணி குடிநீர் பல பகுதிகளில் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் நகராட்சியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து வருகிறது. அதனை களைந்திடும் வகையில் தாமிரபரணி குடிநீர் திட்டம் அனைத்து வார்டுகளுக்கும் சீராகவும், செம்மையாகவும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இப்பகுதி மக்கள் விரும்பும் வகையில் செங்கோட்டை மேலூர் வழியாக டவுன் பஸ் இயக்கப்படும். நகராட்சி பஸ்ஸ்டாண்டில் பயணிகள் தங்கும் விடுதி அமைப்பதற்கு முழுமையான ஏற்பாடு செய்யப்படும்.
செங்கோட்டை நகராட்சி முழு சுகாதாரம் கொண்ட நகராட்சியாக உருவாக்குவதற்கு முதல்வர் உத்தரவின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். பல ஆண்டுகளுக்கு பிறகு கடையநல்லூர் தொகுதியுடன் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள செங்கோட்டை நகராட்சிக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டு தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சராக முதல்வர் ஜெயலலிதாவால் செந்தூர்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது ஆலோசனையின்படி அனைத்து நலத்திட்டங்களும் செங்கோட்டைக்கு கிடைத்திட முழுமையான அளவில் முயற்சியும், நடவடிக்கையும் எடுக்கப்படும். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் செங்கோட்டை நகராட்சி எந்தவித செழிப்பையும் காண முடியாத நிலைதான் இருந்து வந்தது. இத்தகைய நகராட்சியை செம்மைபடுத்தி செங்கோட்டைக்கு சிறப்பு செய்யும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும்'' என்றார்.
செங்கோட்டை நகராட்சி தலைவராக கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த செங்கோட்டை நகர செயலாளர் ரஹீம் மீண்டும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த திமுக ஆட்சியில்தான் செங்கோட்டையில் சிறப்பு பெற்ற பணிகள் நடந்துள்ளதாக ரஹீம் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து திமுக வேட்பாளர் ரஹீம் கூறியதாவது:- ''சுதந்திர வரலாற்றில் இடம்பெற்று இப்போதும் செங்கோட்டை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட தியாகி வீரவாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டித்தர திமுக அரசில் தான் அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. பல ஆண்டுகளாக பராமரிப்பற்று கிடந்த செங்கோட்டையில் சிறுவர், சிறுமியர் மகிழ்ச்சிக்காக விளையாட்டின் நலனை கருத்தில் கொண்டு பூங்காக்கள் அமைக்கப்பட்டது.
அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு பெண்களுக்கு என 1.25 கோடி ரூபாய் செலவில் தனி கட்டடம் திமுக ஆட்சியில்தான் கட்டித்தரப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் செங்கோட்டை நகராட்சியில் பல கோடி செலவில் நகர மக்களின் தேவைகள் அறிந்து அனைத்து அடிப்படை வசதிகளும் காலதாமதமின்றி உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டது. வீரவாஞ்சிநாதன் சிலைக்கு புதிய நடைமேடை அமைத்து தந்தது திமுக அரசுதான்.
செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டி தருவதற்கு திமுக அரசில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருந்த போதிலும் கடந்த 5 ஆண்டுகளில் கட்சி பாகுபாடின்றி செங்கோட்டை நகராட்சி மக்களுக்கு மக்கள் சேவை செய்யப்பட்டுள்ளது. சோடியம் விளக்குகள், ஹைமாஸ் விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன.
அனைத்து பகுதிகளுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தெருவிளக்கு பராமரிப்பு உடனுக்குடன் நடந்தது. சுகாதார பிரச்னை களையப்பட்டு சுத்தமான நகராட்சியாக செங்கோட்டை உருவாக்கப்பட்டது. இந்த பகுதி மக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் சிறப்பான, செழிப்பான திட்டங்கள், நகர மக்களை மகிழ்ச்சிபெற வைக்கும் திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டது.
இந்த திட்டங்கள் தொய்வின்றி தொடர்வதற்கு திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். நகராட்சி மக்களும் இதற்கான வாய்ப்பினை எனக்கு தருவார்கள் என்று நம்புகிறேன். மீண்டும் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டால் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். வார்டுகளில் காணப்படும் குறைகள் எல்லாம் தாமதமின்றி களையப்படும்'' என்றார்.