/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மருத்துவ பணியாளர்களுக்கு கணினி பயிற்சிமருத்துவ பணியாளர்களுக்கு கணினி பயிற்சி
மருத்துவ பணியாளர்களுக்கு கணினி பயிற்சி
மருத்துவ பணியாளர்களுக்கு கணினி பயிற்சி
மருத்துவ பணியாளர்களுக்கு கணினி பயிற்சி
ADDED : ஜூலை 24, 2011 02:25 AM
திருப்பூர் : அரசு மருத்துவமனை பணியாளர்களுக்கு விரைவில், கணினி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளும் கணினி மயமாக்கப்படுகின்றன. சென்னை யில் இருந்து ஒரே 'சாப்ட் வேர்' மூலம் அனைத்து நோயாளிகள் விவரம் 'அப்டேட்' செய்யப்படும்; இதனால் நோயாளிகள் தங்களது சிகிச்சை குறித்து பைல்களை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது; டாக்டர்களின் சிரமமும் குறையும். தேசிய சுகாதார மேம்பாட்டு திட்டத்துக்காக 6,000க்கும் மேற்பட்ட கம்யூட்டர்கள் வாங்கப்பட்டுள்ளது. கடலூர், வேலூர் மாவட்டங்களில் கம்யூட்டர்கள் அரசு மருத்துவமனைகளில் பொருத்தப்பட்டு அதனை பயன்படுத்துவது; நோயாளிகளின் பெயர், முகவரி, வயது, பாலினம், நோய் குறித்து குறிப்புகளை பதிவுசெய்வது குறித்து அங்குள்ள மருத்துவமனை பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்காக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் 82; அவிநாசி 25; உடுமலை 42; பல்லடம் 31; காங்கயம் 32; தாராபுரம் 41; ஜல்லிப்பட்டி 11; கரடிவாவி 7 ஆகிய மருத்துவமனைகளுக்கு 271 கம்யூட்டர்கள் வழங்கப்பட்டு உள்ளது; சென்னையில் இருந்து 'சாப்ட்வேரை' உருவாக்கிய பின், அதிகாரிகள் மருத்துவ மனை பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். தேசிய சுகாதார மேம்பாட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் கூறுகையில்,'' மாவட்டம் முழுவதும் கனிணி பொருத்தும் பணி துரிதமாக நடந்து வருகிறது; திருப்பூரில் மட்டும் இன்னும் துவங்கவில்லை. முன்ன தாகவே, கணினி பயிற்சி கொடுக்கப்படும்,'' என்றார்.
.


