Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/போடி 22வதுவார்டில் சுகாதார குடிநீர் : காங்., வேட்பாளர் கணேசன் உறுதி

போடி 22வதுவார்டில் சுகாதார குடிநீர் : காங்., வேட்பாளர் கணேசன் உறுதி

போடி 22வதுவார்டில் சுகாதார குடிநீர் : காங்., வேட்பாளர் கணேசன் உறுதி

போடி 22வதுவார்டில் சுகாதார குடிநீர் : காங்., வேட்பாளர் கணேசன் உறுதி

ADDED : அக் 13, 2011 09:57 PM


Google News

போடி : போடி நகராட்சி 22 வது வார்டில் சுகாதாரமான குடிநீர், ரோடு, நவீனசுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து நம்பர் ஒன் வார்டாக மாற்றுவேன் என காங்கிரஸ் வேட்பாளராக ' கை' சின்னத்தில் போட்டியிடும் கே.எஸ்.

கணேசன் கூறினார். அவர் கூறியதாவது: நான் 48 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறேன். வார்டு மக்களுக்கு முதியோர் பென்ஷன், விதவை உதவித்தொகை, ரேஷன் கார்டு, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற்று தந்துள்ளேன்.

* பெரியாண்டவர்புரம் தெரு, ஜக்காலம்மன் கோயில் தெரு, வீரணன் சந்து, பங்காரு மேற்கு தெருக்களில் ரோடு, சாக்கடை , சிறுபாலங்கள் அமைக்கப்படும்.

* நூலக வசதி, பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* சாக்கடை, கழிவுநீர் தேக்கமின்றியும், கொசுத்தொல்லை ஏற்படாத வகையில் சுகாதார நடவடிக்கை எடுக்கப்படும்.

* தெருக்கள் தோறும் குப்பை தொட்டிகள் அமைத்து குப்பை இல்லாத முதன்மை பெற்ற நம்பர் ஒன் வார்டாக மாற்ற பாடுபடுவேன்.

* போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் உள்ள டாஸ்மாக் கடைகள் வேறு பகுதிக்கு மாற்றப்படும்.

* பங்காரு தெரு, மேற்கு தெரு, கொத்தன் சந்து, சேது பாஸ்கரன் தெருக்களில் சுகாதாரமான குடிநீர், சிமெண்ட் ரோடு, சாக்கடை வசதி, சிறுபாலங்கள் அமைத்து தரப்படும், என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us