/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/செய்யார் - மாமல்லபுரம் அரசு பஸ் இயக்கம்செய்யார் - மாமல்லபுரம் அரசு பஸ் இயக்கம்
செய்யார் - மாமல்லபுரம் அரசு பஸ் இயக்கம்
செய்யார் - மாமல்லபுரம் அரசு பஸ் இயக்கம்
செய்யார் - மாமல்லபுரம் அரசு பஸ் இயக்கம்
ADDED : செப் 17, 2011 10:37 PM
மாமல்லபுரம் : செய்யாரிலிருந்து, மாமல்லபுரத்திற்கு அரசு பஸ் போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது.மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலாத் தலமாக திகழ்கிறது.
சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக, சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு இடங்களிலிருந்து, அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.தற்போது, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாரிலிருந்து மாமல்லபுரத்திற்கு, 16ம் தேதியிலிருந்து, அரசு பஸ் போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மண்டல போக்குவரத்துக் கழகம் சார்பில், 157 எம். என்ற தடம் எண்ணில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பஸ், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக, மாமல்லபுரம் வருகிறது. மாமல்லபுரத்தில் காலை 10.20 மணிக்கும், மாலை 5.10 மணிக்கும் புறப்படும்.