ADDED : ஆக 06, 2011 06:07 PM
சபரிமலை: பக்தர்கள், எளிதாக சுவாமி தரிசனம் செய்ய வசதியாக, சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஆன் - லைன் வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதற்கான பணிகளில், கேரள போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். ஆன் - லைன் மூலம் பதிவு செய்யும் பக்தர்களில், ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும், ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்து திரும்ப, ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், விரைவாக சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வசதி கிடைக்கும். இது சம்பந்தமான பேச்சுவார்த்தை, ஏற்கனவே திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு மற்றும் கேரள மாநில போலீஸ் அதிகாரிகள் இடையே நடந்து முடிந்துள்ளது. இவ்வசதிக்காக ஏற்கனவே செயல்பட்டு வரும், கேரள போலீசாரின் வலை தளத்தின் வழியே, பக்தர்கள் ஆன் - லைன் மூலம், தங்களது வருகை குறித்து பதிவு செய்ய, தற்போது ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக, ண்ச்ஞச்ணூடிட்ச்டூச்.டுஞுணூச்டூச்ணீணிடூடிஞிஞு.ஞ்ணிதி.டிண என்ற வலைதளம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த வலைதளம் வழியாக தான், பக்தர்களுக்கு ஆன் - லைன் முன்பதிவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ்வலைதளம் வழியாக, சபரிமலையில் அவ்வப்போதைய நெரிசல், பருவ நிலை, வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் வசதி போன்ற பல்வேறு தகவல்களை, பக்தர்கள் பெற்று வருகின்றனர். தற்போது அதே வலைதளத்தில் தான், ஆன் - லைன் வசதியும் செய்யப்பட உள்ளது.
இவ்வலைதளம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், சபரிமலையில் உற்சவ காலங்களில், பக்தர்களின் நெரிசலை பெருமளவு குறைக்க முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


