Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கறவை மாடு திட்ட குளறுபடி பயனாளிகளிடம் விசாரணை

கறவை மாடு திட்ட குளறுபடி பயனாளிகளிடம் விசாரணை

கறவை மாடு திட்ட குளறுபடி பயனாளிகளிடம் விசாரணை

கறவை மாடு திட்ட குளறுபடி பயனாளிகளிடம் விசாரணை

ADDED : செப் 24, 2011 09:47 PM


Google News

தாண்டிக்குடி : கொடைக்கானல் மலைப்பகுதியில்,இலவச கறவை மாடு வழங்கியதில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. நத்தம் பூதகுடி, கொடைக்கானல் கும்பறையூர் ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, கறவை மாடுகள் வழங்கப்பட்டன. கும்பறையூரில் ஊராட்சி தலைவர் தன்னிச்சையாக பயனாளிகளை தேர்வு செய்ததாக புகார் எழுந்தது. ஆந்திராவில் 50 பசுக்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அ.தி.மு.க., வினர் புகார் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் கால்நடை உதவி இயக்குனர், விழாவிற்கு முன் மாற்றப்பட்டது; லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை போன்றவற்றால், மர்மம் நீடிக்கிறது. மாடும், கன்று தனித்தனியாக சில பயனாளிகளுக்கு வழங்கியது; தரமற்ற மாடுகள் அதிக விலை கொடுக்கப்பட்டது; கறவை குறைவு என, புகார் பட்டியல் நீள்கிறது. 'முறைகேடு நடந்துள்ளதா? என்பது, முழு விசாரனைக்கு பின் வெளிச்சத்திற்கு வரும்,' என்கின்றனர் பயனாளிகள்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us