/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/உள்ளாட்சி தேர்தலுக்கு அலுவலர்கள் நியமனம்உள்ளாட்சி தேர்தலுக்கு அலுவலர்கள் நியமனம்
உள்ளாட்சி தேர்தலுக்கு அலுவலர்கள் நியமனம்
உள்ளாட்சி தேர்தலுக்கு அலுவலர்கள் நியமனம்
உள்ளாட்சி தேர்தலுக்கு அலுவலர்கள் நியமனம்
ADDED : செப் 07, 2011 12:45 AM
திருப்பூர் :திருப்பூர் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய குழு தேர்தல்
நடத்தும் அலுவலர் மற்றும் உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட
தேர்தல் அலுவலர் மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கை: நடைபெற உள்ள உள்ளாட்சி
அமைப்புகளுக்கான தேர்தலில், திருப்பூர் மாவட்ட ஊராட்சி மற்றும் 13 ஊராட்சி
ஒன்றியங்களின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாநில தேர் தல் கமிஷனின்
பரிந்துரைப்படி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் மாவட்டத்தில்
புதிதாக அமைய உள்ள, மாவட்ட ஊராட்சி 17 வார்டுகளை உள்ளடக்கியதாக உள்ளது.
இதில், வார்டு எண் 1 மற்றும் 2 அவிநாசி, 3 திருப்பூர், 4 ஊத்துக்குளி, 5
மற்றும் 6 பல்லடம் ஆகியவற்றின் தேர்தல் நடத்தும் அலுவலராக ஊரக வளர்ச்சி
திட்ட இயக்குனர் ரேணுகாதேவி நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட தொழில் மைய
பொது மேலாளர் அசோகன், 7 முதல் 11 ஆகிய வார்டுகளான பொங் கலூர் (7), காங்கயம்
(8), வெள்ளசகோவில்,(9) குண்டடம் - காங்கயம் (10) மற்றும் குண்டடம் -
தாராபுரம் (11) ஆகியவற்றுக்கும், கூட்டுறவு துறை இணை பதிவாளர் ராமமூர்த்தி
12 முதல் 17 வார்டுகளான, குடிமங்கலம் (12), உடுமலை (13 மற்றும் 14),
உடுமலை மற்றும் மடத்துக்குளம் (15) தாராபுரம் (16) மற்றும் மூலனூர் (17)
வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த
அலுவலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தங்கள் பணிகளை மேற்கொள்வர். தேர்தல்
அறிவிப்பு வெளியிடுதல், வேட்பு மனு பெறுதல், பரிசீலனை செய்தல், மனுக்கள்
வாபஸ் பெறுதல், சின்னம் ஒதுக்கீடு, ஓட்டு எண்ணிக்கை மற்றும் முடிவு
வெளியிடுதல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்வர்.ஊராட்சி ஒன்றியங்கள்:
மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள்
விவரம்:அவிநாசி ஒன்றியம் - சட்டநாதன், கனிம மற்றும் சுரங்க துறை உதவி
இயக்குநர்.திருப்பூர் - செங்கோட்டையன், திருப்பூர் ஆர்.டி.ஓ.,ஊத்துக்குளி -
செல்வராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்.பல்லடம் - லோகநாயகி, ஊராட்சி
உதவி இயக்குனர். பொங்கலூர் - விமலாதேவி, உதவி திட்ட அலுவலர், ஊரக
வளர்ச்சி.காங்கயம் - ராஜராம், உதவி திட்ட அலுவலர், ஊரக
வளர்ச்சி.வெள்ளகோவில் - பொன்னுசாமி, உதவி திட்ட அலுவலர், ஊரக
வளர்ச்சி.குண்டடம் - இளங்கோவன், நேர்முக உதவியாளர், சத்துணவு
திட்டம்.குடிமங்கலம் - பூபதி, சிறு சேமிப்பு துறை நேர்முக உதவியாளர்.உடுமலை
- ஜெயமணி, உடுமலை ஆர்.டி.ஓ.,மடத்துக்குளம் - மோகன், உதவி திட்ட அலுவலர்,
மகளிர் திட்டம்.தாராபுரம் - அழகுமீனா, தாராபுரம் ஆர்.டி.ஓ.,மூலனூர் -
தனசீலிஜெயகுமாரி, உதவி இயக்கு னர் (தணிக்கை). இவர்கள், தேர்தல் பணியை அந்
தந்த பகுதியின் தலைமையிடத்தில் மேற்கொள்வர். உதவி தேர்தல் நடத்தும்
அலுவலர்கள்: மாவட்ட ஊராட்சி வார்டுக்கு நியமிக்கப்பட்டுள்ள உதவி தேர்தல்
நடத்தும் அலுவலர்கள் விவரம்: (வார்டு வாரியாக)1.அவிநாசி - சசிகலா, உதவி
ஆணையர், கலால்.2.அவிநாசி - காளியண்ணன், உதவி இயக்குனர், நில அளவைத்
துறை.3.திருப்பூர் - ராமமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர். 4.ஊத்துக்குளி -
ஹரிநாராயணன், மாவட்ட மேலாளர் தாட்கோ.5.பல்லடம் - ஜோதிசுசீலா, திட்ட
அலுவலர், டி.என்.ஐ.பி.,6.பல்லடம் - தமிழரசி, மாவட்ட சமூக நல
அலுவலர்.7.பொங்கலூர் - ரவீந்திரன், திருப்பூர் கூட்டுறவு துறை துணை
பதிவாளர்.8.காங்கயம் - முத்துக்குமார், தாராபுரம் கூட்டுறவு துறை துணை
பதிவாளர். 9.வெள்ளகோவில் - அழகிரி, திருப்பூர் கூட்டுறவு துறை துணை
பதிவாளர்.10.குண்டடம் - அசோகன், பொது மேலாளர் மாவட்ட தொழில்
மையம்.11.குண்டடம் - பொன்முடி, வேளாண் உதவி இயக்குனர், மடத்துக்குளம்.
12.குடிமங்கலம் - செல்வராஜ், வேளாண் உதவி இயக்குனர், குடிமங்கலம்.13.உடுமலை
- மாணிக்கம், வேளாண் உதவி இயக்குனர், காங்கயம்.14.உடுமலை - வேலுசாமி,
வேளாண் உதவி இயக்குனர், வெள்ளகோவில்.15.மடத்துக்குளம் -சண்முகம், வேளாண்
உதவி இயக்குனர், குண்டடம்.16.தாராபுரம் - சுந்தரராஜன், வேளாண் உதவி
இயக்குனர், அவிநாசி.17.மூலனூர் - அரசப்பன், வேளாண் உதவி இயக்குனர்,
ஊத்துக்குளி.


