Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/விடுதியான தொகுப்பு வீடுகளுக்கு "செக்': தி.மு.க., வினர் "கிலி'

விடுதியான தொகுப்பு வீடுகளுக்கு "செக்': தி.மு.க., வினர் "கிலி'

விடுதியான தொகுப்பு வீடுகளுக்கு "செக்': தி.மு.க., வினர் "கிலி'

விடுதியான தொகுப்பு வீடுகளுக்கு "செக்': தி.மு.க., வினர் "கிலி'

ADDED : ஜூலை 13, 2011 02:54 AM


Google News
கொடைக்கானல் : கொடைக்கானலில் காட்டேஜ்களாக உரு மாறிய தொகுப்பு வீடுகளுக்கு, நகராட்சியினர் கிடுக்கிப்பிடி போட்டுள்ளனர்.

நகராட் 24 வார்டுகளில் 900 பேருக்கு அரசின் இலவச தொகுப்பு வீடுகள் கட்ட அனுமதிக்கப்பட்டது. முதற்கட்டமாக 500 வீடுகள் கட்ட ஆரம்பித்தனர். இதில், தி.மு.க., கவுன்சிலர்களின் சிபாரிசு, பினாமிகள் என்ற அடிப்படையில் 100 வீடுகள் ஒதுக்கப்பட்டன. இந்த முறைகேடு குறித்து நகராட்சி கமிஷனரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த ஆய்வில் புதுக்காடு, நாயுடுபுரம், காமராஜர் சாலை, அண்ணாநகர், ஆனந்தகரி முதல் தெரு பகுதிகளில் தொகுப்பு வீடுகள், காட்டேஜ்களாக மாறியது தெரிந்தது. இதுகுறித்து 'தினமலர்' இதழிலில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து பயனாளிகள் யார், பின்னணி என்ன, எந்த அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்டது? என, நகராட்சியினர் விசாரணையை துவக்கியுள்ளனர். இதனால் தி.மு.க., கவுன்சிலர்களுக்கு 'கிலி' ஏற்பட்டுள்ளது.கமிஷனர் ராஜன் கூறுகையில்,''காட்டேஜ்களாக இயங்கும் தொகுப்பு வீடுகள் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us