/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/108 ஆம்புலன்ஸ் சேவையில் வேலை : கேம்பஸ் இன்டர்வியூவில் தகவல்108 ஆம்புலன்ஸ் சேவையில் வேலை : கேம்பஸ் இன்டர்வியூவில் தகவல்
108 ஆம்புலன்ஸ் சேவையில் வேலை : கேம்பஸ் இன்டர்வியூவில் தகவல்
108 ஆம்புலன்ஸ் சேவையில் வேலை : கேம்பஸ் இன்டர்வியூவில் தகவல்
108 ஆம்புலன்ஸ் சேவையில் வேலை : கேம்பஸ் இன்டர்வியூவில் தகவல்
ADDED : ஜூலை 14, 2011 11:53 PM
சிவகாசி : '' 108 ஆம்புலன்ஸ் சேவையில் அதிக வேலைவாய்ப்பு உள்ளதாக,'' சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் ஜி.வி.கே., எமர்ஜன்சி மேனேஜ்மென்ட் ஆராய்ச்சி இன்ஸ்டியூட் விருதுநகர் மேலாளர் ஸ்ரீராமன் தெரிவித்தார்.
சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் விலங்கியல், தாவரவியல் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவியர்கள் 108 ஆம்புலன்ஸ் அவசர சேவையில் பணியாற்ற நடந்த 'கேம்பஸ் இன்டர்வியூவில் அவர் பேசுகையில், ''தமிழகத்தில் 2008 செப். 15ல் 108 சேவை துவக்கப்பட்டன. 32 மாவட்டங்களில் 400 ஆம்புலன்ஸ்கள் செயல்படுகின்றன. இச் சேவைக்கு கூடுதலாக 400 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஆம்புலன்சில் பணியாற்ற மெடிக்கல் டெக்னிசியன்கள் 1350 பணியிடங்கள் உள்ளன. 3000 மெடிக்கல் டெக்னீசியன்கள் தேவை உள்ளது. இப் பணிக்கு பிளஸ்2 வில் பயாலஜி குரூப் படித்தவராகவும், அல்லது 3 ஆண்டு டிகிரி, காமர்ஸ் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். சென்னை சேப்பாக்கம் அரசு கஸ்தூரிபா காந்தி மகப்பேறு ஆஸ்பத்திரியில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை அவசர சேவை உதவியாளர் பணிக்கும், டிரைவர் வேலைக்கு ஹெவி லைசென்ஸ் வைத்துள்ளவர்கள் 164 செ.மீ., உயரம், 5 ஆண்டு அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். இவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நேர்முக தேர்வு நடக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் நேர்முக தேர்வில் பங்கேற்கலாம். சென்னையில் 45 நாட்கள் பயிற்சி அளித்து வேலை வழங்கப்படும். மேலும் ,விரபரங்களுக்கு 96000 37108 மொபைலில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார். இதன் எழுத்து தேர்வில் 30 மாணவர்கள் பங்கேற்றனர். 7 மாணவிகள் உள்பட 14 தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாதம் 7500 சம்பளம் கிடைக்கும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவினை முதல்வர் பாஸ்கரன் வழங்கினார்.