/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கணக்கு வழக்கில்லா பிரச்னைகள்: கண்ணீர் சிந்தும் கணக்கன்பட்டி மக்கள்கணக்கு வழக்கில்லா பிரச்னைகள்: கண்ணீர் சிந்தும் கணக்கன்பட்டி மக்கள்
கணக்கு வழக்கில்லா பிரச்னைகள்: கண்ணீர் சிந்தும் கணக்கன்பட்டி மக்கள்
கணக்கு வழக்கில்லா பிரச்னைகள்: கண்ணீர் சிந்தும் கணக்கன்பட்டி மக்கள்
கணக்கு வழக்கில்லா பிரச்னைகள்: கண்ணீர் சிந்தும் கணக்கன்பட்டி மக்கள்
ADDED : செப் 07, 2011 11:13 PM
பழநி பாதயாத்திரை பக்தர்களின் வழித்தட கிராமங்களில், கணக்கன்பட்டி முக்கிய இடம் பெறுகிறது.
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டம்பட்டி, கணக்கன்பட்டி, ராஜாபுரம் புதூர் கிராமங்களில், கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமான அளவில் வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவை முழுமையான பராமரிப்பு இல்லாததால், பயன்பாடின்றி வேதனை அம்சங்களாக மாறியுள்ளன. தெருவிளக்கு, குடிநீர், கழிவுநீர் கால்வாய், கழிவறை பிரச்னைகள் அதிகம்.இப்பகுதியினர் சொல்வது என்ன? எம்.ராஜன்: பழநி-திண்டுக்கல் ரோட்டில் இருந்து, எரமநாயக்கன்பட்டி செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. ரோடு சந்திப்பில் உள்ள பாலம் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. இதில் அடைப்பை நீக்க, ஊராட்சி நிர்வாகத்தினர் இயந்திரம் மூலம் தோண்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அபராதம் வசூலித்த நெடுஞ்சாலைத்துறை, இதனைச் சீரமைக்கவோ, முறையான மூடி அமைக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை.சில மாதங்களில், மூன்று விபத்துகளை ஏற்படுத்தியுள்ளது. குடிநீர் தொட்டிகள் சரிவர சுத்தம் செய்யப்படாமல், புழுக்களுடன் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.ஆர்.லீலாவதி, ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி: ராஜாபுரம் புதூரில் உள்ள கழிவறை மட்டுமே முறையாக பராமரிக்கப்படுகிறது. நுழைவு கட்டணமாக ஒரு ரூபாய் வசூலிக்கின்றனர். இதற்கான ரோடு சேதமடைந்து பல ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படவில்லை. மழைக்காலங்களில் சகதியைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. தண்ணீர் வசதி இல்லாததால், பொட்டம்பட்டி கழிவறை பயன் இன்றி உள்ளது. புதர்ச்செடிகளால், விஷப் பூச்சிகளின் நடமாட்டம் மக்களை அச்சுறுத்தி வருகிறது. பழநி ரோடு விரிவாக்க பகுதியில் ஏராளமான வீடுகள் உருவாகியுள்ளன. அவற்றிற்கு குடிநீர் இணைப்பு கிடைக்கவில்லை. அதிக போக்குவரத்துள்ள ரோட்டைக் கடந்து, வெகுதூரம் சென்று உப்பு நீரை எடுக்கின்றனர்.வி.செல்வராஜ்: அனுமதி பெற்ற இடத்தை விட்டுவிட்டு, அதே நிதியில் அதிகாரிகளின் ஆசியுடன் வேறு இடங்களில் சிமென்ட் ரோடு அமைத்தனர். இப்பிரச்னைகளால் பல இடங்களில் ரோடு முழுமை பெறவில்லை. நிதியை முழுமையாக செலவிட்டுள்ளனர். பொட்டம்பட்டி வடக்கு, மேற்குத் தெருக்களில் போதிய தெருவிளக்குகள் இல்லை. கழிவுநீர் கால்வாய் பராமரிக்கப்படாமல், கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் அபாயம் உள்ளது. விளையாட்டு மைதானம் பராமரிப்பின்றி, முட்புதர் மண்டியுள்ளது. இதை முன்பு, பாதயாத்திரை பக்தர்கள் தங்குமிடமாக பயன்படுத்தினர். ஊராட்சி நிர்வாகம் எதிர்ப்பு காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பந்தல், குடிநீர் வசதி இல்லாமல் மர நிழலில் பக்தர்கள் ஓய்வெடுக்கும் அவலம் உள்ளது.


