/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சின்னாற்றில் செடி ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் கோரிக்கைசின்னாற்றில் செடி ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் கோரிக்கை
சின்னாற்றில் செடி ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் கோரிக்கை
சின்னாற்றில் செடி ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் கோரிக்கை
சின்னாற்றில் செடி ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் கோரிக்கை
ADDED : செப் 10, 2011 03:37 AM
தர்மபுரி: சின்னாறு ஆற்றுப்படுகை நீர் வழிப்பாதைகளில் ஆக்கிரமித்துள்ள செடிகளை அகற்றிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியில் காவிரியில் இருந்து பிரியும் துணை நதியான சின்னாறு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா பஞ்சப்பள்ளி அணையில் தேக்கப்பட்டு, பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் தர்மபுரி பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஏரிகளின் நீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் சின்னாறு அணை நிரம்பி உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்படும்.
தற்போது, தளி பெரிய ஏரி நிரம்பிய நிலையில் அதில் இருந்து உபரிநீர் சின்னாற்றுக்கு வருகிறது. வரும் நாட்களில் மழை தீவிரம் அடையும் போது, மழை நீர் சின்னாறு அணைக்கு வரும் வாய்ப்புள்ளது.மொத்தம் கொள்ளவு 50 அடியில் தற்போது 19 அடி தண்ணீர் வந்துள்ள நிலையில் பருவமழை தீவிரம் அடையும் போது, நவம்பர் மாதத்துக்குள் அணை நிரம்ப வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். தற்போது, அணையில் நீர் கசிவு மற்றும் அணைக்கு கீழ் பகுதியில் பெய்த மழையால் சின்னாற்றில் குறைந்த அளவில் தண்ணீர் செல்கிறது.சின்னாற்று படுகை பகுதியில் பல்வேறு தேவைக்கு மணல் சுரண்டப்பட்டதால், ஆற்றுப்படுகை முழுவதும் பள்ளத்தாக்காக மாறியிருப்பதோடு, நீர் வழிப்பாதைகள் அனைத்தும் நானல் மற்றும் கோரைப்புல் அதிக அளவில் வளர்ந்து நீர் வழித்தடங்களை தடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக ஆற்றின் குறுக்கே செல்லும் பாலப்பகுதியில் பெரும் பள்ளத்தாக்காக மாறி செடி, கொடிகளின் ஆக்கிரமிப்பு பல இடங்களில் உள்ளது. அத்திமுட்லு பாலம் பகுதியில் பெரிய அளவில் பள்ளமாக மாறியிருப்பதாலும், செடி, கொடிகள் வளர்ந்து நீர் போக்கை தடுத்து வருவதோடு, அந்த பகுதியில் நீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. பருவமழைக்கு முன் ஆற்று நீர் வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்பு செடி, கொடிகளை அகற்ற பொதுப்பணித்துøறியனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


