/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/திருப்புத்தூரில் கல்லூரி மாணவி கடத்தல் : குளிர்பானத்தில் மது கலந்து பலாத்காரம்திருப்புத்தூரில் கல்லூரி மாணவி கடத்தல் : குளிர்பானத்தில் மது கலந்து பலாத்காரம்
திருப்புத்தூரில் கல்லூரி மாணவி கடத்தல் : குளிர்பானத்தில் மது கலந்து பலாத்காரம்
திருப்புத்தூரில் கல்லூரி மாணவி கடத்தல் : குளிர்பானத்தில் மது கலந்து பலாத்காரம்
திருப்புத்தூரில் கல்லூரி மாணவி கடத்தல் : குளிர்பானத்தில் மது கலந்து பலாத்காரம்
ADDED : அக் 08, 2011 11:00 PM
திருப்புத்தூர் : திருப்புத்தூர் கல்லூரி மாணவியை காரில் கடத்தி பலவந்தமாக குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் சீதளி வடகரை ரோட்டில் பைக்கில் வந்த இரு வாலிபர்கள் போதையுடன் இளம்பெண் ஒருவரை இறக்கிவிட்டுச் சென்றனர். பொதுமக்கள் அப்பெண்ணிடம் விசாரித்துக்கொண்டிருந்த போது, மீண்டும் பைக்கில் அதே வாலிபர்கள் வந்தனர். அவர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் திருப்புத்தூரைச் சேர்ந்த அந்த பெண் ஜெயஸ்ரீ(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பதும், கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த அவர், அதே பகுதியில் வசிக்கும் சக்திவேல்,22, என்பவரைக் காதலித்துள்ளது தெரிய வந்தது. நேற்று முன்தினம் திருப்புத்தூரில் ரோட்டில் சென்ற ஜெயஸ்ரீயை காரில் வந்த கண்டவராயன்பட்டியைச் சேர்ந்த சரத்குமார்,19, கடத்தி சென்று சக்திவேலிடம் ஒப்படைத்தார். காரையூர்-புதுவளவு ரோட்டில் கண்மாய் அருகே அதே காரில் ஜெயஸ்ரீயை, சரத்குமார் உள்பட 4 பேர் போதையில் பலாத்காரம் செய்ததை பார்த்த சிலர் அவர்களை எச்சரித்தனர். இதன் பின்னரே பைக்கில் ஜெயஸ்ரீயை, சரத்குமார், கலை தினேஷ்,16 இருவரும் திருப்புத்தூர் அழைத்து வந்த போது அப்பகுதி மக்களிடம் சிக்கியது தெரியவந்தது. ஜெயஸ்ரீ போலீசில் கூறியுள்ளதாவது: என்னை காரில் கடத்தி சென்று சக்திவேலை திருமணம் செய்ய வற்புறுத்தினர். நான் மறுக்கவே, பலவந்தமாக போதை கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து என்னிடம் தகாத முறையில் நடந்தனர் என தெரிவித்துள்ளார். மகளிர் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்த சக்திவேல், சரத்குமார், கலைதினேஷ் ஆகியோரைக்கைது செய்தனர். ஜெயஸ்ரீயை திருப்புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ சோதனைக்கு அனுப்பினர்.


