/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அரசு துறையில் காலியிடங்களை நிரப்ப கோரிக்கைஅரசு துறையில் காலியிடங்களை நிரப்ப கோரிக்கை
அரசு துறையில் காலியிடங்களை நிரப்ப கோரிக்கை
அரசு துறையில் காலியிடங்களை நிரப்ப கோரிக்கை
அரசு துறையில் காலியிடங்களை நிரப்ப கோரிக்கை
ADDED : ஜூலை 28, 2011 09:50 PM
திருப்பூர் : தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க ஆண்டு பேரவை கூட்டம்
நடந்தது; மாவட்ட தலைவர் சுகுமார் தலைமை வகித்தார்.
மாவட்ட இணை செயலாளர்
பாலகிருஷ்ணன் வரவேற்றார். செயலாளர் சுப்பையன் ஆண்டறிக்கை
வாசித்தார்.கூட்டத்தில், 'சாயக்கழிவு நீர் பிரச்னையால் திருப்பூரில்
அனைத்து விதமான தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன; தமிழக அரசு,
இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.'பழைய பஸ்
ஸ்டாண்ட் சீரமைப்பு பணியை விரைவில் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு
கொண்டு வர வேண்டும்; அரசின் அனைத்து துறைகளிலும் இரண்டு லட்சத்துக்கும்
அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், அரசின் நலத்திட்டங்கள்,
சமூக நலத்திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைவதில் தாமதம்
ஏற்படுகிறது. தமிழக அரசு, மக்கள் நலன்களை கருத்தில் கொண்டு, காலி
பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசை போல், குறைந்தபட்ச ஓய்வூதியம்
ரூ.3,500யை ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


