Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் பஸ் ஜப்தி

விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் பஸ் ஜப்தி

விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் பஸ் ஜப்தி

விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் பஸ் ஜப்தி

ADDED : ஆக 11, 2011 01:07 AM


Google News

தேவகோட்டை : தேவகோட்டை மானம்புவயலைச் சேர்ந்த கட்டட காவலாளி கருப்பையா.

கடந்த 2008ல் உதையாச்சியில் உள்ள மகள் சுசீலா வீட்டிற்கு வந்து விட்டு சைக்கிளில் திரும்பினார். ஒத்தக்கடை பாலம் அருகே வரும் போது, அரசு பஸ் மோதி இறந்தார்.இழப்பீடு கேட்டு வக்கீல் வெங்கட்ராமன் மூலம் மனைவி லட்சுமி, மகள் ஆகியோர் தேவகோட்டை சப்கோர்ட்டில் மனு செய்தனர். விசாரணை செய்த நீதிபதி ரூ. ஒரு லட்சத்து 33 ஆயிரம் லட்சுமி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குமாறு 2010 ல் உத்தரவிட்டார். இது வரை வழங்காததால் வட்டியுடன் சேர்த்து ரூ. ஒரு லட்சத்து 55 ஆயிரம் ஆனது. இத்தொகை கேட்டு மனு செய்தனர்.இழப்பீடு வழங்காததால் நீதிபதி தனியரசு, அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று மதியம் கோர்ட் ஊழியர் தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us