Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சக்கரக்கோட்டையில் கள்ளஓட்டு போட முயற்சி : கலெக்டரிடம் புகார்

சக்கரக்கோட்டையில் கள்ளஓட்டு போட முயற்சி : கலெக்டரிடம் புகார்

சக்கரக்கோட்டையில் கள்ளஓட்டு போட முயற்சி : கலெக்டரிடம் புகார்

சக்கரக்கோட்டையில் கள்ளஓட்டு போட முயற்சி : கலெக்டரிடம் புகார்

ADDED : அக் 13, 2011 09:17 PM


Google News

ராமநாதபுரம் : சக்கரகோட்டை ஊராட்சியில் வெளிநாடு சென்றவர்களின் பெயரில் கள்ளஓட்டு போடுவதற்கு முயற்சி நடப்பதாக வேட்பாளர்களும், பொது மக்களும் புகார் தெரிவித்தனர்.

சக்கரகோட்டை ஊராட்சி தலைவர் வேட்பாளர் நூர் முகம்மது, கலெக்டர் அருண்ராயிடம் கொடுத்த புகார்: சக்கரக்கோட்டை ஊராட்சி பள்ளி, வட்டாரபோக்குவரத்து அலுவலகம் அருகே வட்டார வளமையம், நர்மதா பள்ளி, வி.ஒ.சி.,அங்கன்வாடி கட்டடம், மேலசோத்தூரணி உள்ளிட்ட குறிப்பிட்ட சில ஓட்டுசாவடிகளில் வெளியூர்களிலிருந்து ஆட்களை கொண்டு வந்து கள்ள ஓட்டுபோட முயற்சிகள் நடந்து வருகிறது. மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தேவையான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கவும், ஓட்டு சாவடிகளில் வீடியோ கேமரா மூலம் ஓட்டுபதிவுகளை பதிவு செய்து பொது மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலர்கள் யாருக்கும் சாதகமாக செயல்படாமல் நியாயமான தேர்தல் நடத்த வேண்டும், இவ்வாறு கோரியுள்ளார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us