அடுத்த தலைமுறைக்கு அறிவை புகுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் நீதிபதி பேச்சு
அடுத்த தலைமுறைக்கு அறிவை புகுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் நீதிபதி பேச்சு
அடுத்த தலைமுறைக்கு அறிவை புகுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் நீதிபதி பேச்சு
சென்னை: ''அடுத்த தலைமுறைக்கு அறிவை புகுத்துவது மனித சமுதாயத்திற்கு செய்கிற மிகப்பெரும் உதவி.
சுப்பாராயஐயர், பத்மநாபன் மற்றும் ரமாமணி கழகம் சார்பில், வரிச்சட்டங்கள் தொடர்பான ரமாமணி நினைவு மாதிரி நீதிமன்ற போட்டிகளின் துவக்கவிழா, தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக அரங்கில் நடந்தது. இவ்விழாவைத் துவக்கி வைத்த, சென்னை ஐகோர்ட் நீதிபதி சுந்தரேஷ் பேசியதாவது: வெற்றி, தோல்வியைப்பற்றி கவலைப்படாமல் மாணவ, மாணவியர் இப்போட்டிகளில் பங்கேற்க வேண்டும். தோல்வியில் தான் நிறைய கற்றுக் கொள்ள முடியும். சட்டங்கள் குறித்த தெளிவான பார்வையை, இந்த போட்டிகளின் மூலம் மாணவ, மாணவியர் பெற முடியும். இவ்வாறு சுந்தரேஷ் பேசினார். விழாவில், தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயகுமார், சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி பிரபாஸ்ரீதேவன், தமிழ்நாடு அம்பேத்கர் பல்கலைக்கழக சீர்மிகு சட்டப்பள்ளியின் இயக்குனர் சவுந்திரபாண்டியன் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த சட்டப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.