/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மானிய விலை வீடு திட்டம் கணக்கெடுப்பு பணி துவக்கம்மானிய விலை வீடு திட்டம் கணக்கெடுப்பு பணி துவக்கம்
மானிய விலை வீடு திட்டம் கணக்கெடுப்பு பணி துவக்கம்
மானிய விலை வீடு திட்டம் கணக்கெடுப்பு பணி துவக்கம்
மானிய விலை வீடு திட்டம் கணக்கெடுப்பு பணி துவக்கம்
ADDED : செப் 06, 2011 01:43 AM
ஈரோடு: நகர்ப்புற ஏழைகளுக்கு மானிய விலையில் வீடு கட்டும் திட்டத்துக்கு
கணக்கெடுப்பு பணி துவங்க இருப்பதாக, கலெக்டர் காமராஜ்
தெரிவித்தார்.நகர்ப்புறங்களில் குடிசைகளில் வசிக்கும் ஏழைகளுக்கு மானிய
விலையில், அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடு கட்டித்தரும் திட்டத்தை தமிழக
அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இத்திட்டம் மூலம் நகர்ப்புறத்தில் குடிசை
வீடுகள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும். இதற்காக குடிசையில் வசிக்கும்
ஏழை மக்களின் சமூக, பொருளாதார கணக்கெடுக்கும் பணி துவங்க உள்ளது. குடிசை
மாற்று வாரியம் சார்பில், சென்னை தரமணியில் உள்ள தேசிய தொழில் நுட்ப
ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.,
தொழில் நுட்பக்கல்வி நிறுவனம் ஆகியவை மூலம், கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
ஈரோடு மாநகராட்சியில் குடிசைப்பகுதியில் வாழும் மக்கள், இக்கணக்கெடுப்பு
பணியின்போது, சரியான தகவல்களை வழங்கி, திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க
வேண்டும் என, மாவட்ட கலெக்டர் காமராஜ் கூறியுள்ளார்.


