ADDED : ஆக 20, 2011 11:31 PM
பொள்ளாச்சி:லாரி ஸ்டிரைக் காரணமாக, வெளியிடங்களுக்கு கொப்பரை அனுப்ப
முடியாததால், வெளிமார்க்கெட்டில் விலை சரிந்துள்ளது.கடந்த 13ம் தேதி
நிலவரப்படி, காங்கேயம் மார்க்கெட்டில், கொப்பரை கிலோவுக்கு ரூ.61 விலை
கிடைத்தது.
தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு ரூ.1,350, தேங்காய் பவுடர்
கிலோவுக்கு ரூ.98 நிர்ணயிக்கப்பட்டது. விவசாயிகள் பறித்து உரித்த தேங்காய்
டன்னுக்கு 17 ஆயிரம் முதல் 18 ஆயிரத்து 500 வரை, பொள்ளாச்சி
சுற்றுப்பகுதிகளில் இருந்து சென்னை உட்பட பகுதிகளுக்கு அனுப்பும் தேங்காய்
டன்னுக்கு 16 ஆயிரம் கிடைத்தது. விவசாயிகள் சொந்தப் பொறுப்பில் பறித்து
இருப்பு வைத்திருக்கும் தேங்காய் ஒன்றுக்கு ரூ.11, வியாபாரிகள் பறித்து
கொள்ள தேங்காய்க்கு ரூ.10 ரூபாய் வழங்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி,
கொப்பரை கிலோவுக்கு 59, தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு 1,330,
தேங்காய் பவுடர் கிலோவுக்கு 87, பறித்து உரிக்கப்பட்ட தேங்காய் டன்னுக்கு
16 ஆயிரத்து ரூபாய் கிடைத்தது. கொப்பரை உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'லாரி
ஸ்டிரைக் காரணமாக, வெளியிடங்களுக்கு கொப்பரை அனுப்ப முடியாததால், உலர்
களங்களில் தேங்கியுள்ளது; இதனால், கொப்பரை மற்றும் தேங்காய் விலை
சரிந்துள்ளது' என்றனர்.


