Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/தமிழக முதல்வர் தகுதிப்பரிசு பெற ப்ளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

தமிழக முதல்வர் தகுதிப்பரிசு பெற ப்ளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

தமிழக முதல்வர் தகுதிப்பரிசு பெற ப்ளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

தமிழக முதல்வர் தகுதிப்பரிசு பெற ப்ளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

ADDED : செப் 04, 2011 12:19 AM


Google News

புதுக்கோட்டை: தமிழக முதல்வரின் தகுதிப் பரிசு பெற விரும்பும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

புதுக்கோட்டை கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கை: எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ எஸ்.சி., வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் விதமாக, தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு தமிழக முதல்வரின் தகுதிப் பரிசு வழங்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு ஆயிரம் மாணவர்கள் மற்றும் ஆயிரம் மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். இப்பரிசு பெற கடந்த கல்வியாண்டில் (2011) ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் 1,055 மதிப்பெண்கள் மற்றும் இதற்கு மேலும் பெற்றுள்ள மாணவர்கள், ஆயிரத்து 72 மதிப்பெண்கள் மற்றும் இதற்கு மேலும் பெற்றுள்ள மாணவிகள் தகுதியுடையவர் ஆவர். தமிழை ஒரு பாடமாக கொண்டு படித்திருக்க வேண்டும். கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி படிப்பவராக இருத்தல் வேண்டும். இதனடிப்படையில் தமிழக முதல்வரின் தகுதிப் பரிசு பெற விரும்பும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய மாணவர்கள், தங்களுடைய கல்வி நிலையங்கள் மூலமாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us