Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ரயிலில் மிட்டாய் விற்ற மதுரை தியாகிக்கு பென்ஷன்

ரயிலில் மிட்டாய் விற்ற மதுரை தியாகிக்கு பென்ஷன்

ரயிலில் மிட்டாய் விற்ற மதுரை தியாகிக்கு பென்ஷன்

ரயிலில் மிட்டாய் விற்ற மதுரை தியாகிக்கு பென்ஷன்

ADDED : செப் 06, 2011 01:43 AM


Google News

மதுரை : நேதாஜியின் படையில் பணியாற்றி, ரயிலில் மிட்டாய் விற்ற முதியவருக்கு மதுரை கலெக்டர் சகாயம், பென்ஷன் தொகை வழங்கி உத்தரவிட்டார்.

மதுரை சிந்தாமணியை சேர்ந்தவர் மாயழகு(83). தள்ளாத வயதிலும் ரயிலில் மிட்டாய் விற்பனை செய்து பிழைப்பு நடத்துகிறார். சில நாட்களுக்கு முன் ரயிலில் பயணித்த, தேனி பழனிசெட்டிபட்டியின் முன்னாள் ராணுவ வீரர் ஜவஹர், பேச்சு கொடுத்தார். மாயழகு நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்ததை அறிந்தார். தட்டுத் தடுமாறி வாழ்க்கையை கழிப்பதை அறிந்து, அவருக்கு முதியோர் பென்ஷன் வழங்கும்படி, மதுரை கலெக்டர் சகாயத்திற்கு கடிதம் எழுதினார்.



கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயசிங் ஞானதுரை விசாரணை நடத்தினார். மாயழகை வரவழைத்து குறைதீர் நாள் கூட்டத்தில் பென்ஷன் வழங்கினார். மாயழகு தினமலர் நிருபரிடம் கூறியதாவது: ரயிலில் 50 முதல் 60 பாக்கெட்டுகள் கடலை மிட்டாய் விற்று அதில் கிடைப்பதை வைத்து பிழைக்கிறேன். மனைவி உள்ளார். மகன்களுக்கு வருவாய் இல்லை. 1941ல் பர்மாவில் ரங்கூனில் இருந்ததை தெரிவித்தேன். அப்போது நேதாஜியின் ஐ.என்.எஸ்., அமைப்பின் பாலசேனாவில் சேர்ந்தேன். நேதாஜியை 3 முறை பார்த்துள்ளேன். 1950ல் இந்தியா வந்து தச்சுப் பணி, கோணி வியாபாரம் செய்தேன். இப்போது மதுரை - கொல்லம் ரயிலில் கோவில்பட்டி சென்று கடலை மிட்டாய் வாங்கி விற்பேன். அப்போதுதான் ஒருவர் என்னை விசாரித்தார். அவர் யாரென இன்னும் தெரியவில்லை. அவருடைய உதவியால், பலரிடம் லஞ்சம் கொடுத்தும் கிடைக்காத உதவி தற்போது கிடைத்துள்ளது. நான் ராணுவத்தில் இருந்ததற்கான நினைவுகளைத் தவிர, ஆதாரங்கள் எதுவும் என்னிடம் இல்லை, என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us