/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பட்டா இன்றி தெருவில் தஞ்சம் தொட்டிய நாயக்கர்கள் முறையீடுபட்டா இன்றி தெருவில் தஞ்சம் தொட்டிய நாயக்கர்கள் முறையீடு
பட்டா இன்றி தெருவில் தஞ்சம் தொட்டிய நாயக்கர்கள் முறையீடு
பட்டா இன்றி தெருவில் தஞ்சம் தொட்டிய நாயக்கர்கள் முறையீடு
பட்டா இன்றி தெருவில் தஞ்சம் தொட்டிய நாயக்கர்கள் முறையீடு
ADDED : செப் 06, 2011 01:43 AM
ஈரோடு : தெருக்களில் வசிக்கும் தங்களுக்கு பட்டா வழங்க கோரி, தொட்டிய
நாயக்கர் சமூகத்தினர், ஈரோடு கலெக்டரிடம் மனு வழங்கினர்.
தொட்டிய நாயக்கர்
சமூகத்தவர் (ஆதியன் பூம்பூம் மாட்டுக்காரர்கள்) மழை வாழ் இனத்தவருக்கு
இணையானவர்கள் என்பதால், எஸ்.டி., பிரிவில் உள்ளனர். ஈரோடு வ.உ.சி., பூங்கா
அருகே பவானி ரோடு நாட்டரங்கோட்டை தெருவில் 120க்கும் மேற்பட்டோர், 20
ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கின்றனர். தங்களுக்கு மனைப்பட்டா கோரி
வருகின்றனர். அறச்சலூர் - நாச்சிவலசு இடையே ஜெ.ஜெ., நகரில் 68 பேருக்கு
ஐந்தாண்டுகளுக்கு முன் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. எஞ்சிய 70
குடும்பத்தினருக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. அறச்சலூர்
ஜெ.ஜெ.நகரிலும், வேறு பல இடங்களிலும் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன.
வீடுகள் இல்லாமல் ரோட்டோரம் வசிப்பதால் 20 ஆண்டுகளில் 15க்கும் மேற்பட்டோர்
வாகனங்கள் மோதி இறந்துள்ளனர். விடுபட்ட அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா
வழங்க கோரி, கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.


