/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சிதம்பரம் பழைய கொள்ளிடத்தில்முதலை கடித்து மூதாட்டி படுகாயம்சிதம்பரம் பழைய கொள்ளிடத்தில்முதலை கடித்து மூதாட்டி படுகாயம்
சிதம்பரம் பழைய கொள்ளிடத்தில்முதலை கடித்து மூதாட்டி படுகாயம்
சிதம்பரம் பழைய கொள்ளிடத்தில்முதலை கடித்து மூதாட்டி படுகாயம்
சிதம்பரம் பழைய கொள்ளிடத்தில்முதலை கடித்து மூதாட்டி படுகாயம்
ADDED : அக் 07, 2011 11:01 PM
சிதம்பரம்:சிதம்பரம் அருகே பழயை கொள்ளிடம் ஆற்றில் குளித்த மூதாட்டியை
முதலை கடித்ததால் காயமடைந்து அவர் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்.கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த புதுப்பூலாமேடு
கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, 62.
இவர் நேற்று மாலை தனது வீட்டின்
அருகில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.அப்போது
ஆற்றில் இருந்த முதலை கிருஷ்ணவேணியின் காலை கடித்துக் குதறி ஆற்றினுள்
இழுத்தது. உடன் அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டதால் மூதாட்டியை விட்டு
விட்டு முதலை தப்பிச் சென்றது.காயமடைந்த மூதாட்டி சிதம்பரம் அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த மாதம் அதே பகுதியில் விஜயகுமார்
என்ற மாணவனை முதலை கடித்தது குறிப்பிடத்தக்கது.தொடரும் முதலை பயத்தால்
அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


