/உள்ளூர் செய்திகள்/தேனி/தி.மு.க., நகர செயலாளர் மீது நிலமோசடி புகார்தி.மு.க., நகர செயலாளர் மீது நிலமோசடி புகார்
தி.மு.க., நகர செயலாளர் மீது நிலமோசடி புகார்
தி.மு.க., நகர செயலாளர் மீது நிலமோசடி புகார்
தி.மு.க., நகர செயலாளர் மீது நிலமோசடி புகார்
ADDED : ஆக 09, 2011 01:24 AM
தேனி : தேனி மாவட்டத்தை சேர்ந்த, தி.மு.க., நகர செயலாளர் மீது நிலமோசடி புகார் அளித்துள்ளார்.
சின்னமனூர் தெற்கு முஸ்லீம்தெருவை சேர்ந்தவர் ஷாஜஹான். இவர், மாவட்ட கூடுதல் எஸ்.பி., செல்வராஜிடம் புகார் அளித்துள்ளார். அதில் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் 66 சென்ட் உள்ள நிலத்தை, சின்னமனூரை சேர்ந்த கதிரேசன், அழகர்சாமி, தி.மு.க., நகர செயலாளர் மயில்வாகனன், சென்னை சாலிக்கிராமத்தை சேர்ந்த தி.மு.க., அமைப்பு செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து அபகரித்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.
நேற்று எஸ்.பி., பிரவின்குமார் அபிநபுவிடம்,மீண்டும் புகார் மனு அளித்தார். அந்த மனு மீது விசாரணை நடத்த எஸ்.பி., உத்தரவிட்டார். போலீசாரிடம் கேட்ட போது, 'இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை. இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து வருகிறோம்' என்றனர்.


