கொடைக்கானலில் இங்கிலாந்து ஆப்பிள்
கொடைக்கானலில் இங்கிலாந்து ஆப்பிள்
கொடைக்கானலில் இங்கிலாந்து ஆப்பிள்
ADDED : ஆக 06, 2011 10:53 PM
கொடைக்கானல்:வெளி நாடுகளில் விளையும் உயர்தர ஆப்பிளை, கொடைக்கானலில்
பயிரிடும் முயற்சியில், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் இறங்கியுள்ளது.
இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்து ஊட்டி, கொடைக்கானலில் ஆப்பிள் விளைச்சல்
உண்டு. பருவ நிலை மாற்றம், பூச்சி தாக்குதலால் சில ஆண்டுகளாக மகசூல்
பாதித்தது. அதிக மகசூல் கண்ட கொடைக்கானல் புதுக்காடு, அப்சர்வேட்டரி
பகுதிகளில் கூட, இம்மரங்களை அகற்றிவிட்டு, உருளை, பீன்ஸ் சாகுபடிக்கு
மாறினர்.
முன் முயற்சி:இந்நிலையில், ஜெர்மன், இங்கிலாந்து நாட்டில் விளையும், சுவை
மிகுந்த ரெட்டெலிசியஸ், மஸ்ட்சோலா, வெஸ்ட்பெல்லா, மயான், ஸ்டார் கில்ம்சன்,
லால்ஆம்ரி, மொலிசியஸ் வகை ஆப்பிள் நாற்றுக்கள், பரிசோதனை முயற்சியாக
கொடைக்கானலில் பயிரிடப்பட்டுள்ளன.
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில், இவை
இயற்கை உரங்கள் மூலம் நன்கு வளர்ந்துள்ளன. மூன்றாவது ஆண்டில் இதில் மகசூல்
எடுக்கலாம். இதை பயிரிடுவதில் விவசாயிகளும் ஆர்வமாக உள்ளனர்.
ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராஜாங்கம் கூறுகையில்,''சில ஆண்டுகளாக ஆப்பிள்
சாகுபடி நஷ்டத்தை ஏற்படுத்தியது. இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரகங்கள்
லாபத்தை கொடுக்கும். இதற்கான பெற ஆலோசனைகளை வழங்குகிறோம்,'' என்றார்.


