ADDED : அக் 07, 2011 10:33 PM
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில், டாஸ்மாக் கடை பாதை மீண்டும் அடைபட்டது.வத்திராயிருப்பில் வி.பி.
தெற்குத்தெரு குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இங்கும் பாரும் இயங்கிவந்தது. வீடுகளின் வாசலில் குடிப்பது, வாசலிலே விழுந்து கிடப்பது, வாந்திஎடுப்பது என குடிமகன்களின் தொந்தரவால் குடியிருப்பவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. கடையை வேறு இடத்திற்கு மாற்ற, அப்பகுதி மக்கள் போராடினர். வீட்டின் உரிமையாளருக்கும் கட்டட உரிமையாளர்யிடையே நடைபாதை பிரச்னை ஏற்பட்டது. கடைக்கு செல்லும் பாதையை அதன் உரிமையாளர் இரு மாதத்திற்கு முன் அடைத்தார். போலீசார் தலையிட்டு ஒருமாதத்தில் வேறு இடத்திற்கு மாற்றுவதாக உறுதிகூறியதை தொடர்ந்து ,தற்காலிகமாக பாதை திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று குடிக்க வந்தவர்கள் வீட்டு வாசலில் தகராறு செய்ததால் , பாதை உரிமையாளர் மீண்டும் அடைத்தார். டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறக்க முடியாமல் தவித்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, ஒருவாரத்தில் கடையை மாற்றுவதாக கூறியதால், கடையை திறந்தனர்.


