மானாமதுரை தேர்தல் தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு
மானாமதுரை தேர்தல் தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு
மானாமதுரை தேர்தல் தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு
ADDED : அக் 08, 2011 09:27 PM
மானாமதுரை:மானாமதுரை அருகேயுள்ள பெரியகோட்டை ஊராட்சித் தலைவர் பதவிக்கு, சரவணக்குமார் போட்டியிடுகிறார்.நேற்று இரவு 8 மணிக்கு, பெரியகோட்டை மேலத்தெருவில் தனது ஆதரவாளர்களுடன் ஓட்டு கேட்டு சென்று கொண்டிருந்த போது, எறும்புடியைச் சேர்ந்த செல்வேந்திரன் மகன் கார்த்திகேயன்,23, என்பவருக்கும், சரவணக்குமார் ஆதரவாளர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டது.இதில், கார்த்திகேயன், சரவணக்குமார் ஆதரவாளர்கள் ஐந்து பேரை, அரிவாளால் வெட்டினார்.
காயமடைந்த 5 பேரும், சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மானாமதுரை சிப்காட் போலீசார், கார்த்திகேயனை கைது செய்தனர்.


