/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மக்களின் வரவேற்பே வெற்றிக்கு முதல்படிமக்களின் வரவேற்பே வெற்றிக்கு முதல்படி
மக்களின் வரவேற்பே வெற்றிக்கு முதல்படி
மக்களின் வரவேற்பே வெற்றிக்கு முதல்படி
மக்களின் வரவேற்பே வெற்றிக்கு முதல்படி
ADDED : அக் 07, 2011 10:33 PM
விருதுநகர் : ''ஓட்டு கேட்டு செல்லும்போது மக்கள் வரவேற்பு அளிப்பதே, எனது வெற்றிக்கு முதல்படி ,'' என, விருதுநகர் 15 வது வார்டு கவுன்சிலர் வேட்பாளர் டி.
செல்வரத்னா கூறினார். விருதுநகர் 15 வது வார் டு கவுன்சிலராக உள்ள டி. செல்வரத்னா, இதே வார்டில் காங்., சார்பில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். பெ.சி. தெருவில் ஓட்டு சேகரித்தபோது அவர் கூறியதாவது: கவுன்சிலராக இருந்த போது, குழாய் மூலம் குடிநீர் எளிதாக கிடைக்க செய்து, குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கண்டுள்ளேன். பெ.சி. தெருவில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த சிறுநீர் கழிப்பிடம் எனது முயற்சியால் சீரமைக்கப்பட்டு, தற்பொது சிறப்பாக செயல்படுகிறது. குப்பைகள் தேங்கா வண்ணம் அதை வெளியேற்றி சுகாதரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். வெயிலுகந்தம்மன் கோயில் பின்புறம் குப்பைகள் கொட்டுவதை வேறு இடத்திற்கு மாற்றி கொடுத்துள்ளேன். சோடியம் விளக்கு அமைத்து கொடுத்துள்ளேன். ஓட்டு கேட்டு செல்லும்போது மக்கள் சிறந்த வரவேற்பு கொடுக்கின்றனர். இது எனது வெற்றிக்கு முதல்படியாக உள்ளது. இதுவரை சிறப்பாக பணியாற்றினேன், இனியும் பணியாற்ற கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன், என்றார்.


