/உள்ளூர் செய்திகள்/தேனி/காந்திய வழியில் நேர்மையான சேவை : காங்., வேட்பாளர் தஸ்லீம் வாக்குறுதிகாந்திய வழியில் நேர்மையான சேவை : காங்., வேட்பாளர் தஸ்லீம் வாக்குறுதி
காந்திய வழியில் நேர்மையான சேவை : காங்., வேட்பாளர் தஸ்லீம் வாக்குறுதி
காந்திய வழியில் நேர்மையான சேவை : காங்., வேட்பாளர் தஸ்லீம் வாக்குறுதி
காந்திய வழியில் நேர்மையான சேவை : காங்., வேட்பாளர் தஸ்லீம் வாக்குறுதி
ADDED : அக் 13, 2011 09:54 PM
தேனி : தேனி காங்., வேட்பாளர் தஸ்லீம் கை சின்னத்திற்கு ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ஆருண் எம்.பி., நகர தலைவர் சின்ஸ், தேனி நகராட்சி தலைவர் பழனிசாமி உட்பட முக்கிய காங்., பிரமுகர்கள் தஸ்லீம் உடன் சென்று ஓட்டுக்களை சேகரிக்கின்றனர். தஸ்லீம் வாக்காளர்களிடம் பேசியதாவது: காந்திய வழியில் நேர்மையாக தேனி மக்களுக்கு பணியாற்றுவேன். தேனி நகராட்சிக்கு 85 கோடி ரூபாயில் வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வந்து சப்ளை செய்வேன். பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடித்து தரமான ரோடு அமைப்பேன்.
தேனி வாரச்சந்தை, பஸ்ஸ்டாண்ட் பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்துவேன். நகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் தனிப்பிரிவு தொடங்குவேன்., குழந்தைகள் விளையாட்டு மைதானம், ரோட்டோரம் நடைபாதை அமைப்பேன் என்றார்.


