/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அதிகாரிகள் பற்றாக்குறையில் போலீஸ் ஸ்டேஷன்கள்: பாதுகாப்பில் தொய்வுஅதிகாரிகள் பற்றாக்குறையில் போலீஸ் ஸ்டேஷன்கள்: பாதுகாப்பில் தொய்வு
அதிகாரிகள் பற்றாக்குறையில் போலீஸ் ஸ்டேஷன்கள்: பாதுகாப்பில் தொய்வு
அதிகாரிகள் பற்றாக்குறையில் போலீஸ் ஸ்டேஷன்கள்: பாதுகாப்பில் தொய்வு
அதிகாரிகள் பற்றாக்குறையில் போலீஸ் ஸ்டேஷன்கள்: பாதுகாப்பில் தொய்வு
ADDED : செப் 24, 2011 09:59 PM
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் டி.எஸ்.பி., கட்டுபாட்டிலுள்ள ஏழு ஸ்டேஷன்களில் ஆண் எஸ்.ஐ., க்கள் இல்லாமல் குற்றங்களை தடுப்பதிலும், பாதுகாப்பிலும் தொய்வு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
முதுகுளத்தூர் டி.எஸ்.பி., கட்டுபாட்டில் முதுகுளத்தூர், கீழத்தூவல், பேரையூர், கடலாடி, கீழச்செல்வனூர் உட்பட ஏழு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில் நேரடியாக தேர்வு செய்யபட்ட பெண் எஸ்.ஐ.,க்கள் முதுகுளத்தூர், கடலாடியில் மட்டும் பணியில் உள்ளனர். இளஞ்செம்பூர் தவிர பிற ஸ்டேஷன்களில் ஓய்வு பெறும் நிலையில் உள்ள சிறப்பு எஸ்.ஐ., க்கள் மட்டும் பணியாற்றுகின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படும் இடங்களுக்கு செல்லவும், ஆண் கைதிகளை விசாரிக்கவும் பெண் எஸ்.ஐ., க்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் பணியாற்றகூடிய முதுகுளத்தூரில் ஒரு இன்ஸ்பெக்டரும், மூன்று எஸ்.ஐ., க்கள் பணியாற்றகூடிய கீழத்தூவலில் ஒரு எஸ்.ஐ., பணியிடம் நிரப்பபடவில்லை. அதிகாரிகள் முதல் போலீசார் பற்றாக்குறையால் பாதுகாப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே அடுத்த வரும் விழா காலங்களை கருதி போலீசாரை நியமிக்க போலீஸ் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். முதுகுளத்தூர் டி.எஸ்.பி., மாதவன் கூறியதாவது: பள்ளிகளில் வரும் மாதங்களில் மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க தனிக்குழு அமைக்கபட்டு, நாள்தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளபட உள்ளது. ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


