Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற கர்ப்பிணி மனைவி பிரசவத்திற்குப்பின் கைது

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற கர்ப்பிணி மனைவி பிரசவத்திற்குப்பின் கைது

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற கர்ப்பிணி மனைவி பிரசவத்திற்குப்பின் கைது

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற கர்ப்பிணி மனைவி பிரசவத்திற்குப்பின் கைது

ADDED : செப் 10, 2011 03:45 AM


Google News
திருநெல்வேலி : நெல்லை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி இரு மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டார்.

நெல்லை அருகே குறிச்சிக்குளம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் பாபு(35). டயர் கம்பெனியில் பணியாற்றினார். இவர் மனைவி உச்சிமாகாளி என்ற உமா(28). கடந்த ஜூலையில் பாபு வீட்டில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தினர். பாபு சாவில் மர்மம் இருப்பதாக அவர் உறவினர்கள் கூறினர். பாபு உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது. மூச்சு திணறி பாபு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இச்சம்பவத்தில் பாபுவின் மனைவி உமாவிற்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உமாவிற்கும், தாழையூத்து ராஜவல்லிபுரத்தை சேர்ந்த லாரிசெட் உரிமையாளர் நல்லசாமிக்கும் இடையே 'கள்ளத்தொடர்பு' இருந்துள்ளது. பாபு ஊரில் இல்லாத நாட்களில் இருவரும் ஜாலியாக இருந்தனர். இதை பாபு கண்டித்தார். இதுதொடர்பான தகராறில் சம்பவத்தன்று பாபுவின் முகத்தில் தலையணையை அமுக்கி நல்லசாமியும், உமாவும் கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் நல்லசாமி அங்கிருந்து சென்றுவிட்டார்.

கணவன் உடலை படுக்கையில் போட்டு விட்டு எதுவும் தெரியாதது போல உமா கதறி நாடகமாடியுள்ளார். இச்சம்பவத்தின் போது உமா கர்ப்பிணியாக இருந்தார். சில நாட்களுக்கு முன் அவருக்கு குழந்தை பிறந்தது.இதையடுத்து தாழையூத்து இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் தனிப்படை போலீசார் உமாவை கைது செய்து நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் உமா கொக்கிரக்குளம் பெண்கள் சிறையில் தன் குழந்தையுடன் அடைக்கப்பட்டார். நல்லசாமியை போலீசார் தேடி வருகின்றனர். உமாவிற்கு சொந்த ஊர் மானூர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us