/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தவறான சிகிச்சையால் இறந்ததாக புகார் கடலூர் அரசு மருத்துவமனை முன் மறியல்தவறான சிகிச்சையால் இறந்ததாக புகார் கடலூர் அரசு மருத்துவமனை முன் மறியல்
தவறான சிகிச்சையால் இறந்ததாக புகார் கடலூர் அரசு மருத்துவமனை முன் மறியல்
தவறான சிகிச்சையால் இறந்ததாக புகார் கடலூர் அரசு மருத்துவமனை முன் மறியல்
தவறான சிகிச்சையால் இறந்ததாக புகார் கடலூர் அரசு மருத்துவமனை முன் மறியல்
ADDED : அக் 12, 2011 01:14 AM
கடலூர் : கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் டாக்டர்களின்
தவறான சிகிச்சையால் இறந்ததாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி அடுத்த குடியிருப்பு காலனியைச் சேர்ந்தவர் கனகராஜ், 40. கூலித்
தொழிலாளி. கடந்த 9ம் தேதி குறிஞ்சிப்பாடி அடுத்த ராசாக்குப்பம் செல்ல
வடலூரில் பஸ் ஏற நடந்து வந்தார். பஸ் நிலையம் அருகே வந்த போது, பின்னால்
வந்த தனியார் பஸ் மோதி பலத்த காயமடைந்த அவர் கடலூர் அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை இறந்தார். டாக்டர்களின்
தவறான சிகிச்சையால் கனகராஜ் இறந்தார். அவரது குடும்பத்திற்கு நஷ்டஈடு
வழங்கி, சிகிச்சையளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனக்கூறி உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு நேற்று காலை 10.30 மணிக்கு
திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த டி.எஸ்.பி., வனிதா, சப்
இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம், தாசில்தார் அசோகன் ஆகியோர் சம்பவ
இடத்திற்குச் சென்று மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம்
செய்ததை தொடர்ந்து 10.45 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. இதனால் கடலூர் -
நெல்லிக்குப்பம் சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.


