Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/தேர்தல் பிரச்சாரத்தில் கூலி தொழிலாளிகள் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களுக்கு பாதிப்பு

தேர்தல் பிரச்சாரத்தில் கூலி தொழிலாளிகள் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களுக்கு பாதிப்பு

தேர்தல் பிரச்சாரத்தில் கூலி தொழிலாளிகள் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களுக்கு பாதிப்பு

தேர்தல் பிரச்சாரத்தில் கூலி தொழிலாளிகள் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களுக்கு பாதிப்பு

ADDED : அக் 11, 2011 01:48 AM


Google News
கரூர்: கரூரில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் தினக்கூலி தொழிலாளர்கள் ஈடுப்பட்டு வருவதால் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் கொசு வலை உற்பத்தி நிலையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில் இரண்டு நகராட்சிகள், 11 டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் 157 கிராம பஞ்சாயத்துகளுக்கு வரும் 17 மற்றும் 19 ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

முதல் கட்ட தேர்தலுக்கு வரும் 15 ம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிகிறது. விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கரூர் நகராட்சிக்கு வரும் 17 ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடக்கிறது.பிரச்சாரத்துக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் இறுதி கட்டமாக ஓட்டு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். போதிய வைட்டமின் 'ப' இறங்காததால் கட்சி தொண்டர்கள் அதிகளவில் பெரும்பாலும் ஒதுங்கியே உள்ளனர். இதனால் ஓட்டுக்கேட்க செல்லும் போது அதிகளவில் கூட்டம் சேர்க்க ஆள் பிடிக்கும் வேலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இறங்கியுள்ளனர்.கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள் மற்றும் கொசுவலை உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் ஜவுளிகளை செக்கிங் செய்யவும், மென்டிங் செய்யவும், துணி வகைளை மடிக்கவும், பேக்கிங் செய்யவும் தினக்கூலி அடிப்படையில் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.கொசுவலை உற்பத்தி நிலையங்களிலும் இதே நிலைதான் உள்ளது. நாள்தோறும் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை குறைந்தப்பட்சமாக வழங்கப்படுகிறது. ஆனால் கரூரில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்படும் தொழிலாளர்களுக்கு மூன்று வேளை உணவு, நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் வரை வழங்கப்படுவதால், பெரும்பாலான தொழிலாளர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்று விட்டனர்.உள்ளாட்சி தேர்தல் என்பதால் அதிகளவில் வேட்பாளர்கள் பே õட்டியிடுகின்றனர். குறிப்பாக உ றவு முறை மற்றும் நட்பு அடிப்படையில் பெரும்பாலான தொ ழிலாளர்கள் வேலைக்கு விடுமுறை போட்டு விட்டு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் கொசுவலை உற்பத்தி நிலையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.'தீபாவளி பண்டிகைக்கு முன் பு சில ஆர்டர்களை குறித்த நேரத்தில் அனுப்ப வேண்டிய நிலை உள்ளதால், பணிக்கு வரும் தின க்கூலி தொழிலாளர்களுக்கு அதி க சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. வரும் 15ம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிகிறது. 16 ம் தேதி ஞாயிறு கி ழமை என்பதாலும், 17 ம் தேதி முதல் கட்ட தேர்தல் என்பதாலு ம் 18 ம் தேதிக்கு மேல்தான் பெ ரும்பாலான தொழிலாளர்கள் மீ ண்டும் வேலைக்கு திரும்பவாய் ப்புண்டு' என டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us