உடல் பருமனை குறைக்க புதிய முறை
இரைப்பையின் அளவை குறைப்பதன்மூலமாக, உடல் எடையை நிரந்தரமாகக் குறைக்கும் பேரியாட்டிக் சிகிச்சை முறை தற்போது இந்தியாவில் பரவலாகி வருகிறது.இரைப்பையின் அளவு 250 மில்லிகிராம் உணவை மட்டுமே தக்க வைத்துக் கொள்கிறது.
தகவல் சுரங்கம்
ரகசிய அறைகள்
பழங்காலத்தில் கோயில்கள், அரண்மனைகளில் மேல்தளத்தில் அமைக்கப்படும் கட்டடங்களுக்கு ஒருவரும், தரைக்கு கீழே அமைக்கப்படும் ரகசிய அறைகளுக்கு மற்றொரு கட்டடக்கலை நிபுணரும் பொறுப்பு ஏற்பர்.தரைக்கு மேல் உள்ள கட்டடங்களை நிர்மாணித்த தலைமைச் சிற்பியின் பெயர் தான் கல்வெட்டில் வரும். ரகசிய அறைகளை நிர்மாணித்தவரின் பெயர் வரலாற்றில் வருவது இல்லை. இந்த ரகசிய அறைகள், கோயில்களில் கருவறையின் கீழ்தான் அமைக்கப்படும்.
ரகசிய அறைகளை அமைக்க கருங்கற்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். கதவுகள் கூட கருங்கற்களாகவே இருக்கும். மரங்கள் மற்றும் பிற உலோகங்கள் பயன்படுத்தப்படவில்லை. பார்ப்போருக்கு எவ்வித சந்தேகமும் வரக்கூடாது என்பதால், பிற உலோகங்கள் பயன்படுத்தப் படுவது இல்லை. ரகசிய அறைகள் சுரங்கப் பாதை களுடன் இணைப்பு பெற்று இருந்தன. கருவூலங் களாக மட்டுமின்றி, எதிரிகளின் படையெடுப்பின் போது தங்கும் இடங்களாகவும் ரகசிய அறைகள் இருந்தன.


