Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சேலம் பள்ளி மாணவன் கடத்தல் : கடத்திய கணவன், மனைவி கைது

சேலம் பள்ளி மாணவன் கடத்தல் : கடத்திய கணவன், மனைவி கைது

சேலம் பள்ளி மாணவன் கடத்தல் : கடத்திய கணவன், மனைவி கைது

சேலம் பள்ளி மாணவன் கடத்தல் : கடத்திய கணவன், மனைவி கைது

ADDED : ஜூலை 14, 2011 12:42 AM


Google News
Latest Tamil News

சேலம் : சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த மாணவனை கடத்திய, கணவன், மனைவி ஆகிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.

சேலம் அன்னதானப்பட்டி, வசந்தநகரை சேர்ந்த வேங்கடதாசின் மகன் ஹரிகிருஷ்ணன். இவர், சேலம் வேதவிகாஸ் மேல் நிலைப்பள்ளியில், ப்ளஸ் 1 படிக்கிறார். ஞாயிற்றுக் கிழமை இரவு, 8.30 மணிக்கு, ஹரிகிருஷ்ணனுக்கு போன் வந்தது.

போனில் பேசிய அவர், உடைகளை மாற்றிக் கொண்டு, பெற்றோரிடம் நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறி, வெளியே சென்றார். திங்கட் கிழமை வரை மாணவன் வீடு திரும்பாததால், அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், வேங்கடதாஸ் புகார் தெரிவித்தார். மாணவனை மீட்க, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், மாணவன் கடத்தப்பட்ட தினத்தில், வேங்கடதாஸ் வீட்டு போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர்கள், 'மாணவனை விடுவிக்க, 5 லட்சம் ரூபாய் வரை பணம் தர வேண்டும்' என, மிரட்டினர்.

மிரட்டல் குறித்து வேங்கடதாஸ், தனிப்படை போலீசாருக்கு தெரிவித்ததை தொடர்ந்து, அவரது குடும்பத்தார் பயன்படுத்தும் மொபைல்போன் எண்களை, தீவிரமாக கண்காணித்தனர். நேற்று அதிகாலையில், கடத்தல் கும்பலிடம் இருந்து மீண்டு வந்த ஹரிகிருஷ்ணனிடம், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மாணவனை கடத்தியதாக, குகை பகுதியை சேர்ந்த சுகுநாதன் மகன் அருண், அவரின் மனைவி கவுரி, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் கூறியதாவது: வேங்கடதாசும், மாணவனை கடத்திய அருணும், ஒரே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் கடத்தப்பட்ட மாணவன் ஹரிகிருஷ்ணனும், அருணும் நண்பர்களாக இருந்துள்ளனர். தன் மகள் திருமணத்துக்காக வேங்கடதாஸ், 5 லட்சம் ரூபாய் வரை சேர்த்து வைத்துள்ளார்.

இதை தெரிந்து கொண்ட அருண், அந்த பணத்தை அபகரிக்க, மாணவன் ஹரிகிருஷ்ணனை, தன் மனைவியுடன் சேர்ந்து கடத்தி, குகையில் உள்ள தன் வீட்டு மாடி படியில் மறைத்து வைத்திருந்தனர். மாணவனை கடத்திய அருண், கவுரி மீது, கூட்டு சதி செய்து, மாணவனை கடத்தியதோடு, அவனுக்கு காயங்களை ஏற்படுத்தியதாக, வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us