/உள்ளூர் செய்திகள்/கடலூர்/திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வுதிட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
ADDED : ஜூலை 23, 2011 11:37 PM
திட்டக்குடி : திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் திட்டக்குடி தாலுகா அலுவலகத்திற்கு வருகை தந்து பணிகளை ஆய்வு செய்தார். ஜூலை 27ம் தேதி எழுத்தூரில் நடைபெற உள்ள மனுநீதி நாள் முகாம் குறித்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தார். முதியோர், விதவை, ஊனமுற்றோர் உதவித் தொகை வேண்டி விண்ணப்பித்த மனுக்கள் மற்றும் விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தாசில்தார் சையத்ஜாபர், சமூக பாதுகாப்பு தாசில்தார் கண்ணன், தலைமையிடத்து துணை தாசில்தார்கள் உடனிருந்தனர்.


