ஹோட்டலில் கார் குண்டுவெடித்து 13 பேர் பலி
ஹோட்டலில் கார் குண்டுவெடித்து 13 பேர் பலி
ஹோட்டலில் கார் குண்டுவெடித்து 13 பேர் பலி
UPDATED : செப் 14, 2011 03:48 PM
ADDED : செப் 14, 2011 03:04 PM
பாக்தாத்: ஈராக்கில் ஹோட்டல் வாசல் நிறுத்தப்பட்டிருந்த கார் குண்டு வெடித்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
41 பேர் பலியாயினர். ஈராக்கின் தலைநகர் பாக்தாத் நகரின் தெற்கு பகுதியில் ஹோட்டல் ஒன்று உள்ளது. இங்கு காலையில் வழக்கம் போல மக்கள் கூட்டம் இருந்தது.அப்போது ஹோட்டல் வாசல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்ததில் 13 பேர் பலியாயினர். 41 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதே போன்று ஈராக்கின் மேற்கு பகுதியில் உள்ள ஹனியாக் நகரில் சாலையோரம் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் பலியானதாக பாதுகாப்புப்படையினர் தெரிவித்தனர்.