Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/மனைவியை தீயிட்டு கொளுத்த முயன்ற கணவன் அதிரடி கைது

மனைவியை தீயிட்டு கொளுத்த முயன்ற கணவன் அதிரடி கைது

மனைவியை தீயிட்டு கொளுத்த முயன்ற கணவன் அதிரடி கைது

மனைவியை தீயிட்டு கொளுத்த முயன்ற கணவன் அதிரடி கைது

ADDED : அக் 11, 2011 01:39 AM


Google News
அரியலூர்: விக்கிரமங்கலம் அருகே இளம் பெண்ணை தீயிட்டு கொளுத்த முயன்ற கணவன் கைது.அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நத்தவெளி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் ஆசைத்தம்பி(32).

இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பார்வதி என்ற பெண்ணுக்கும் கடந்த ஆறு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு அபிநயஸ்ரீ, அனிதா என இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணம் ஆன நாள் முதல் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ஆசைத்தம்பி, இதுபற்றி மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய ஆசைத்தம்பியின் சகோதரன், ஆசைத்தம்பி மற்றும் அவரது மனைவி, மகள்கள் ஆகியோருக்கும் சேர்த்து ஆடைகள் வாங்கி கொண்டு வந்து கொடுத்தார்.இதையடுத்து எனது தம்பி உனக்கும் உனது குழந்தைகளுக்கும் எப்படி துணிமணி வாங்கி வந்து கொடுக்கலாம். அப்படி என்றால் உனக்கும் எனது தம்பிக்கும் தொடர்பு உள்ளதா? என கேட்டு பார்வதியிடம் ஆசைத்தம்பி தகராறு செய்தார்.இதையடுத்து வீட்டில் இருந்த பழைய மெத்தையை எடுத்து வீட்டு தோட்டத்தில் போட்டு தீவைத்து எரித்தார். எரியும் தீயில் மனைவி பார்வதி மற்றும் மகள்களை தள்ளி கொல்ல முயன்றார்.கடந்த 5ம் தேதி நடந்த இச்சம்பவத்தை அடுத்து, தீக்காயங்களுடன் தப்பிய பார்வதி கொடுத்த புகாரின் பேரில், நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்த விக்கிரமங்கலம் போலீஸார், தனது மனைவி மக்களை எரித்து கொலை செய்ய முயன்ற குற்றத்தின்கீழ், ஆசைத்தம்பியை கைது செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us