தெலுங்குப் பாடல் பாடுகிறார் ராப் இசைக் கலைஞர் ஏகான்!
தெலுங்குப் பாடல் பாடுகிறார் ராப் இசைக் கலைஞர் ஏகான்!
தெலுங்குப் பாடல் பாடுகிறார் ராப் இசைக் கலைஞர் ஏகான்!
ADDED : செப் 27, 2011 02:56 PM

ராப் இசைக் கலைஞர் ஏகான் தெலுங்குப் படத்தில் பாடல் ஒன்றை பாட இருப்பதாக கூறப்படுகிறது. ஷாருக்கானின் ராஒன் படத்தில் சமக் சலோ என்ற பாடல் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
அந்த வெற்றியைத் தொடர்ந்து டோலிவுட், ஏகானுக்கு வலை விரித்தது. மகேஷ் பாபு நடிக்கும் பிசினஸ் மேன் என்ற படத்தில் ஏகான் ஒரு பாடலை பாட இருக்கிறாராம். இது குறித்து அப்படத்தின் இசையமைப்பாளர் தமன் கூறுகையில் : இந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட்டாக வேண்டும், வித்தியாசமாக அமைய வேண்டும் என்று திட்டமிட்டோம். அதனால் தான் சர்வதேசப் புகழ் ஏகானை புக் செய்தோம் என்றார். மேலும் ஏகானுடன் சேர்ந்து வேலை செய்யயிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தமன் கூறியுள்ளார்.
அமெரிக்க ராப் இசை சந்தையி்ல, தி டிரபிள், கன்விக்டட், ப்ரீடம் ஆகிய ஆல்பங்களால் அசத்திய ஏகான் தற்போது பல்வேறு மொழிகளிலும் பாடி பேரும் புகழும் சம்பாதித்து வருகிறார்.


