Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஐகோர்ட்டில் ரகசிய கேமராக்கள் இல்லை?

ஐகோர்ட்டில் ரகசிய கேமராக்கள் இல்லை?

ஐகோர்ட்டில் ரகசிய கேமராக்கள் இல்லை?

ஐகோர்ட்டில் ரகசிய கேமராக்கள் இல்லை?

ADDED : செப் 07, 2011 07:41 PM


Google News
புதுடில்லி: டில்லி ஐகோர்ட்டில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தால் இன்றைய குண்டுவெடிப்பு சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என கருத்து எழுந்துள்ளது.

கடந்த மே 25ம் தேதி டில்லி ஐகோர்ட்டில் குண்டுவெடிப்பு நடந்தது. இதனை தொடர்ந்து டில்லி போலீசார் ஐகோர்ட்டில் பலத்த சோதனை நடத்தினர். இதன் பின்னர் பல இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் 3 மாதங்கள் ஆகியும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்படவில்லை. ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தால் சம்பவம் தடுத்திருக்க வாய்ப்பு உண்டு எனபாதுகாப்பு அதிகார ஒருவர் கூறினார். ரகசிய கேமராக்கள் பொருத்துவது குறித்து அதிகார வட்டாரங்கள் கூறுகையில், ரகசிய கேமராக்கள் பொருத்துவது என்பது டில்லி அரசின் பொது பணித்துறையின் பணியாகும். இதனை அந்த துறையே மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் கூறின.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us