/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப் ஈரோட்டில் வீடுவீடாக விநியோகம்புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப் ஈரோட்டில் வீடுவீடாக விநியோகம்
புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப் ஈரோட்டில் வீடுவீடாக விநியோகம்
புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப் ஈரோட்டில் வீடுவீடாக விநியோகம்
புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப் ஈரோட்டில் வீடுவீடாக விநியோகம்
ADDED : அக் 11, 2011 02:34 AM
ஈரோடு:உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக, புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப்புகள், பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக விநியோகிக்கும் பணி துவங்கியது.ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி மேயர், 60 மாநகராட்சி கவுன்சிலர்கள், 19 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், 183 யூனியன் கவுன்சிலர், 225 பஞ்சாயத்து தலைவர், 2,093 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், நான்கு நகராட்சி தலைவர், 102 நகராட்சி கவுன்சிலர்கள், 42 டவுன் பஞ்சாயத்து தலைவர், 630 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் என 3,363 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடக்கிறது.மாவட்டத்தில் ஏழு லட்சத்து 51 ஆயிரத்து 123 ஆண், ஏழு லட்சத்து 39 ஆயிரத்து 526 பெண், 47 திருநங்கைகள் என 14 லட்சத்து 90 ஆயிரத்து 696 வாக்காளர்கள் உள்ளனர்.
பெரும்பாலானோர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளனர். புதிதாக பெயர் சேர்த்தவர்கள், வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காதவர்களும் உள்ளனர்.அனைத்து வாக்காளர்களும், ஓட்டுப்போடும் வகையில், வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய, பூத் ஸ்லிப் வழங்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, யூனியன், டவுன் பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து பகுதிகளுக்கு, பூத் ஸ்லிப்பின், ஒரிஜினல் பிரின்ட் அனுப்பப்பட்டது. இவை, நேற்று முதல் நேரடியாக வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டது. அந்தந்த ஓட்டுச்சாவடிக்கு உரிய அலுவலர்கள், இப்பணியில் ஈடுபட்டனர்.


