/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/திசையன்விளையில் அண்ணாதுரை பிறந்த நாள்திசையன்விளையில் அண்ணாதுரை பிறந்த நாள்
திசையன்விளையில் அண்ணாதுரை பிறந்த நாள்
திசையன்விளையில் அண்ணாதுரை பிறந்த நாள்
திசையன்விளையில் அண்ணாதுரை பிறந்த நாள்
ADDED : செப் 16, 2011 01:40 AM
திசையன்விளை : திசையன்விளையில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ராதாபுரம் ஒன்றிய, திசையன்விளை நகர திமுக சார்பில் அண்ணாதுரை 103வது பிறந்த நாள் விழா மற்றும் திமுக கொடியேற்று விழா திசையன்விளை பழைய பஸ் ஸ்டாண்ட் முன் நடந்தது. ராதாபுரம் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். திசையன்விளை நகர செயலாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். பஞ்., துணைத் தலைவர் டிம்பர் செல்வராஜ் பேசினார். ஒன்றிய கவுன்சிலர் கேசவன், நாராயணன், ராஜன், பஞ்., கவுன்சிலர் கண்ணன், ரிவிங்ஸ்டன், வார்டு உறுப்பினர்கள் சுயம்பு, எட்வின், செல்வன், சுப்பிரமணியன், மாரியப்பன், அவைத்தலைவர் ரெங்கசாமி, தனபால், ஜான்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சில்வெஸ்டர் நன்றி கூறினார்.


