/உள்ளூர் செய்திகள்/சென்னை/எம்.ஜி.ஆர்., பல்கலைக்கு மத்திய கவுன்சில் கடிதம்எம்.ஜி.ஆர்., பல்கலைக்கு மத்திய கவுன்சில் கடிதம்
எம்.ஜி.ஆர்., பல்கலைக்கு மத்திய கவுன்சில் கடிதம்
எம்.ஜி.ஆர்., பல்கலைக்கு மத்திய கவுன்சில் கடிதம்
எம்.ஜி.ஆர்., பல்கலைக்கு மத்திய கவுன்சில் கடிதம்
ADDED : அக் 09, 2011 12:24 AM
சென்னை : சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ பாடத் திட்டத்தில் மாற்றம் செய்யும் முடிவை திரும்பப் பெறுமாறு, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு, மத்திய கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது.
இரண்டு வாரத்துக்குள் உரிய பதிலளிக்காவிடில், இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான பாடத் திட்டத்தில் மாற்றம் செய்ததோடு, அம்மருத்துவ படிப்புகளுக்கான பெயரிலும் மாற்றம் செய்ய எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதற்கு, இந்திய முறை மருத்துவக்கான மத்திய கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பாடத்திட்டம், பெயரிலும் மாற்றம் செய்ய பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு செய்தால், இம் மருத்துவ படிப்புகளை நடத்த பல்கலைக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தது. இதையடுத்து, பெயரில் செய்யவிருந்த மாற்றத்தை திரும்பப் பெறுவதாக எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம், மத்திய கவுன்சிலுக்கு தெரிவித்தது. ஆனால், பாடத்திட்ட மாற்றத்தை திரும்பப் பெறுவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யும் முடிவை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும் என கேட்டு, மருத்துவ பல்கலைக்கு, மத்திய கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், இரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.


