/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/எலக்ட்ரானிக்ஸ் கடையில் பயங்கர தீ: பொருட்கள் நாசம்எலக்ட்ரானிக்ஸ் கடையில் பயங்கர தீ: பொருட்கள் நாசம்
எலக்ட்ரானிக்ஸ் கடையில் பயங்கர தீ: பொருட்கள் நாசம்
எலக்ட்ரானிக்ஸ் கடையில் பயங்கர தீ: பொருட்கள் நாசம்
எலக்ட்ரானிக்ஸ் கடையில் பயங்கர தீ: பொருட்கள் நாசம்
ADDED : அக் 09, 2011 12:05 AM
பாபநாசம்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரத்தை சேர்ந்தவர் தங்கராசு.
இவர் அய்யம்பேட்டை மதகடி பஜாரில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார்.நேற்று மதியம் 1 மணிக்கு சாப்பிடுவதற்காக தங்கராசு கடையை மூடிவிட்டு சென்றார். மூடியிருந்த கடையில் மதியம் 2 மணியளவில் திடீரென புகை வந்தது. அருகில் இருந்தவர்கள் பாபநாசம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.பாபநாசம் தீயணைப்பு துறை அலுவலர் சேதுராமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கடையின் கதவை உடைத்து தீயயை அணைத்தனர்.இத் தீ விபத்தில் கடையில் இருந்த மிக்சி, கிரைண்டர், ஃபேன் உள்ளிட்ட ஏராளமான எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.தீவிபத்து நடந்த போது மின்தடை ஏற்பட்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் தஞ்சாவூர் -கும்பகோணம் சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.


