/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மூன்று டவுன் பஞ்., அலுவலகத்துக்கு ஒரு செயல் அலுவலர்: பணிகள் பாதிப்புமூன்று டவுன் பஞ்., அலுவலகத்துக்கு ஒரு செயல் அலுவலர்: பணிகள் பாதிப்பு
மூன்று டவுன் பஞ்., அலுவலகத்துக்கு ஒரு செயல் அலுவலர்: பணிகள் பாதிப்பு
மூன்று டவுன் பஞ்., அலுவலகத்துக்கு ஒரு செயல் அலுவலர்: பணிகள் பாதிப்பு
மூன்று டவுன் பஞ்., அலுவலகத்துக்கு ஒரு செயல் அலுவலர்: பணிகள் பாதிப்பு
ஓசூர்: ஓசூர் அருகே மூன்று டவுன் பஞ்சாயத்துகளுக்கு ஒரே ஒரு செயல் அலுவலர் பணியாற்றுவதால், மூன்று டவுன் பஞ்சாயத்து வார்டுகளிலும் வளர்ச்சி திட்டப்பணிகள் மட்டுமின்றி முக்கிய அடிப்படை பணிகள் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் மத்திகிரியோடு பர்கூர் டவுன் பஞ்சாயத்தை சேர்த்து கவனித்து வருகிறார். தற்போது மத்திகிரி, கெலமங்கலத்தில் பொறுப்பாகவும், தேன்கனிக்கோட்டையில் ரெகுலர் செயல் அலுவலராகவும் பணிபுரிந்து வந்தார். ஒரே செயல் அலுவலர் பல்வேறு டவுன் பஞ்சாயத்து அலுவலகங்களை சேர்த்து கவனிப்பதால் வளர்ச்சி பணிகள் விரைவாகவும், முழுமையாகவும் முடிக்க முடியவில்லை. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அவசர கால அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.
செயல் அலுவலர் அலுவலகத்துக்கு வாரத்துக்கு ஒரு முறை மட்டும் வந்து செல்வதால், அன்றாட பணிகளில் தேக்கநிலை நீடித்து வருகிறது. கவுன்சிலர்கள் அலுவலக ஊழியர்களை தங்கள் கைபாவைகளாக பயன்படுத்தி விதிமுறைகளை மீறி பல்வேறு பணிகளை செய்ய வலியுறுத்துகின்றனர். செயல் அலுவலர் அலுவலகத்துக்கு வருவது அபூர்வமாக உள்ளதால், பணிகளை முடித்த கான்டிராக்டர்களுக்கு உடனுக்குடன் 'செக்' வழங்க முடியவில்லை. இதனால், இவர்கள் டெண்டர் எடுத்த பணிகளை அடுத்து துவங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.


