/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பிரான்மலையில் வங்கிக் கிளை காங்., வேட்பாளர் கே.ஜெயராம்பிரான்மலையில் வங்கிக் கிளை காங்., வேட்பாளர் கே.ஜெயராம்
பிரான்மலையில் வங்கிக் கிளை காங்., வேட்பாளர் கே.ஜெயராம்
பிரான்மலையில் வங்கிக் கிளை காங்., வேட்பாளர் கே.ஜெயராம்
பிரான்மலையில் வங்கிக் கிளை காங்., வேட்பாளர் கே.ஜெயராம்
ADDED : அக் 08, 2011 11:00 PM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம்,பிரான்மலை ஒன்றிய கவுன்சில் 1வது வார்டு காங்.,வேட்பாளர் கே.ஜெயராம் தெரிவித்ததாவது: பிரான்மலையில் தென் கைலாயம் என்றழைக்கப்படும் மங்கை பாகர் கோயில், மதநல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக விளங்கும் ஷேக் அப்துல்லா அவுலியா தர்காவிற்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர்.
அவர்கள் தங்க விடுதி வசதி, இலவச கழிப்பறை, பஸ் நிலையம், தேரோடும் வீதிகளில் புதிய சாலை, கழிவு நீர் வாய்கால் அமைக்கப்படும்.மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பரிந்துரையில் பிரான்மலையில் அரசுடமை வங்கி திறக்கவும், அரசு வங்கி கிளைகளில் மாணவர்கள், விவசாயதொழிலாளர்கள்,கல்உடைப்பவர்கள், பூ,வியாபாரம் செய்பவர்களுக்கு கடன் வழங்கவும் ஏற்பாடுசெய்யப்படும். படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். சிங்கம்புணரியிலிருந்து வேங்கைப்பட்டி, கோபாலபச்சேரி, பிரான்மலை, முட்டாக்கட்டி, மேலப்பட்டி வழியாக கொட்டாம்பட்டி வரை மினி பஸ் வசதி செய்யப்படும். மேலப்பட்டி ஊராட்சி பிள்ளையார்பட்டிக்கு ரோடு வசதி,தடுப்புச் சுவர் அமைக்கப்படும், ஒடுவன்பட்டி,ஐநூற்றிப்பட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பில் எம்.பி., நிதியில்சமுதாய கூடம் கட்டப்படும். கோபால பச்சேரி கிராமம் வனக்குழுவில் சேர்க்கப்படும்.
மலைப்பாங்கான இப்பகுதியில் தேனீ வளர்ப்பு தொழில் துவங்கப்படும். அடையளஞ்சான் கோயில் ஊரணியை மேம்படுத்தி சோடியம் விளக்குபொருத்தப்படும்.மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவுடன் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றார்.


