ADDED : அக் 08, 2011 11:05 PM
அக். 1: தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு விரைவாக முடிவெடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், சர்ச்சைக்குரிய இந்த கோரிக்கை தொடர்பாக, 'பல்வேறு அரசியல் கட்சிகளுடன் மேலும் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. இந்த பணிகள் முடிவடைய இன்னும் காலம் ஆகும்' என, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
அக். 2: தனித் தெலுங்கானா கோரிக்கையை வற்புறுத்தி, டில்லி காந்தி சமாதியில் உண்ணாவிரதம் இருந்த, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், தனது உண்ணாவிரதத்தை
பாதியில் வாபஸ் பெற்றார்.
அக். 4: காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆந்திர அமைச்சர்கள் அடங்கிய குழுவினர்,
பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த போது,'தெலுங்கானா விவகாரத்தில் ஒரு முடிவு எடுத்தே ஆக வேண்டும். இதனால், 14 மாவட்டங்கள் ஸ்தம்பித்துள்ளன. இனிமேலும் தாமதித்தால் நிலைமை மோசமாகும்' எனத் தெரிவித்தனர்.


