கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் சிறப்பம்சம்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் சிறப்பம்சம்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் சிறப்பம்சம்

கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து அவர், வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை:ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து, உலகம் முழுவதும் உள்ள அணுமின் உற்பத்தியுடன் சம்பந்தப்பட்ட அமைப்புகளை விழிப்படையச் செய்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம், சமீபத்தில் சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்டதைப் போல, ஆயிரம் மடங்கு வலிமை கொண்டது. இந்நிலையில், சிக்கில் ஏற்பட்ட நிலநடுக்கமே இந்தியாவை உலுக்கிய கடுமையான நிலநடுக்கம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அணுமின் நிலையத்தில் நடத்திய ஆய்வுகளின் பயனாக, கூடுதல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில், அணு உலைகள் மூடப்படும் போது, அணு எரிபொருளை குளிர்விப்பதற்காக, தலா ஒரு டீசல் ஜெனரேட்டர் கொண்ட நான்கு தனித் தனித் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. குளிர்விப்பதற்கான டீசல் ஜெனரேட்டர், அதில் உள்ள இணைப்பு அமைப்புகள், கட்டுப்பாட்டு கருவிகள் போன்றவை, கூடங்குளம் பகுதியில் ஏற்படும் சுனாமியோ, வெள்ளப்பெருக்கோ ஆகியவை எந்த உயரத்திற்கு எழுமோ, அதைவிட அதிக உயரத்தில் பொருத்தப்பட உள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், ஒட்டு மொத்த அணு உலை அமைப்பும் தானியங்கி முறையில் குளிர்விக்கப்படும் என்பது தான்.இவ்வாறு சீனிவாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன், நாட்டின் மிகச் சிறந்த அணுசக்தி விஞ்ஞானி. தற்போது, அணுசக்தி கழகத்தின் உறுப்பினராக உள்ளார். இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும், திட்ட கமிஷன் உறுப்பினராகவும், அணுசக்தி துறை செயலராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய அணுமின் நிலையங்களை அமைத்ததில் இவரின் பங்கு அதிகம்.
மீனவர்களுக்கு பாதிப்பிருக்காது!
- எஸ்.உமாபதி -


