/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தீவிரமடைந்து வரும் தேர்தல் பணிகள்மாவட்ட அலுவலர் நேரில் ஆய்வுதீவிரமடைந்து வரும் தேர்தல் பணிகள்மாவட்ட அலுவலர் நேரில் ஆய்வு
தீவிரமடைந்து வரும் தேர்தல் பணிகள்மாவட்ட அலுவலர் நேரில் ஆய்வு
தீவிரமடைந்து வரும் தேர்தல் பணிகள்மாவட்ட அலுவலர் நேரில் ஆய்வு
தீவிரமடைந்து வரும் தேர்தல் பணிகள்மாவட்ட அலுவலர் நேரில் ஆய்வு
ADDED : அக் 08, 2011 10:58 PM
திருப்பூர் : திருப்பூர் பகுதியில் தேர்தல் தொடர்பானபணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆய்வு செய்தார்.
தமிழக தேர்தல் கமிஷனருடன் நாளை நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. மாவட்டத்தில் வரும் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப் பதிவு நடக்கிறது. ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், 16 பேரூராட்சிகள், 17 மாவட்ட ஊராட்சி வார்டுகள் மற்றும் 265 ஊராட்சிகளுக்கான தேர்தல் நடக்கிறது. இதற்கு ஊரகப் பகுதியில் 1,572 மற்றும் நகர்ப்புறங்களில் 862 என மொத்தம் 2,434 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் ஓட்டுச் சாவடி எண் உள்ளிட்ட விபரங்கள் பெயிண்ட்டில் எழுதும் பணி நடக்கிறது. தேர்தல் பணிக்காக, 15,000 ஓட்டுச் சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு இரண்டு கட்டப் பயிற்சி நடந்துள்ளது.ஓட்டுச் சாவடி அமைந்துள்ள பகுதிகள் 191மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அவற்றில் பணியாற்ற மண்டல அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அளவில் உள்ள ஓட்டுச் சாவடிகள் மற்றும் பதட்டமான ஓட்டுச் சாவடிகளில் பணியாற்ற தேவைப்படும் போலீசார் குறித்த கணக்கெடுப்பும் நடக்கிறது. அதன்படி, போலீசார்தேர்தல் பணிக்கு வர உள்ளனர்.நகர்ப்புற பகுதிகளில் ஓட்டுப் பதிவுக்குப் பயன்படுத்தும் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் தயாராகி வருகிறது; ஊரகப் பகுதிகளில் பயன்படுத்தும் ஓட்டுச்சீட்டுகள் அச்சடிக்கும் பணியும் தீவிரமாகநடக்கிறது. இப்பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மதிவாணன் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர். அச்சடிக்கப்பட்ட ஓட்டுச் சீட்டுகளை, மாதிரி ஓட்டுச் சீட்டு படிவத்துடன் ஒப்பிட்டு சரி பார்த்தனர். ஓட்டுச் சீட்டு அச்சடிக்கும் பணியை தீவிரப்படுத்த அச்சகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.எண்ணிக்கை மையம்: மாநகராட்சிக்கான ஓட்டு எண்ணும் மையம், திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஓட்டுப் பதிவுக்குப் பின், இந்த இயந்திரங்கள் மேயர் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு என தனித்தனியான அறைகளில் வைக்கப்படும். அதன் பின் எண்ணிக்கை நாளில் அவை வரிசையாக எடுத்துச் செல்லப்படும். இதற்கான ஏற்பாடுகளையும் தேர்தல் அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.தேர்தல் பார்வையாளர்கள் நாளை வர உள்ளனர். அவர்கள் இவற்றை ஆய்வு செய்து, தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துவர். மாநில தேர்தல் கமிஷனருடன் நாளை கோவையில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் ஏற்பாடு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதால், தேர்தல் பிரிவினர் ஆய்வை தீவிரப்படுத்தி உள்ளனர்.


