Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கல்வி உதவித்தொகைக்கு நன்றி கூறி இசைப்பள்ளி மாணவர்கள் பேரணி

கல்வி உதவித்தொகைக்கு நன்றி கூறி இசைப்பள்ளி மாணவர்கள் பேரணி

கல்வி உதவித்தொகைக்கு நன்றி கூறி இசைப்பள்ளி மாணவர்கள் பேரணி

கல்வி உதவித்தொகைக்கு நன்றி கூறி இசைப்பள்ளி மாணவர்கள் பேரணி

ADDED : செப் 07, 2011 01:49 AM


Google News

ஈரோடு: இசைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 200 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்க உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்து, இசைப்பள்ளி மாணவர்கள் பேரணி நடத்தினர்.

கலை பண்பாட்டுத்துறை சார்பில், தமிழகத்தில் 17 மாவட்டங்களில் அரசு இசைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளிகளில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. அரசு வழங்கும் மூன்றாண்டு கால சான்றிதழ் படிப்பில், 12 முதல் 25 வயதுக்குப்பட்ட இருபாலரும் சேரலாம். ஆண்டுக்கு 150 ரூபாய் கட்டணம்.



அரசு பஸ்களில் இலவச பாஸ் வழங்கப்படம். அரசினர் விடுதியில் தங்கி பயிலவும் ஏற்பாடு செய்யப்படும். இசைப்பள்ளியில் மூன்றாண்டு படிப்பு முடித்து சிறப்பான முறையில் தேறிய மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்பு வசதி ஏற்படுத்தப்படும். இப்பள்ளி மாணவர்களுக்கு மாதம் 200 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஈரோடு இசைப்பள்ளி மாணவர்கள் பேரணி நடத்தினர். மாநகராட்சி அலுவலகத்தில் துவங்கிய பேரணி, சம்பத்நகர் இசைப்பள்ளி வரை

நடந்தது.



அ.தி.மு.க., நகர செயலாளர் மனோகரன் துவக்கி வைத்தார். கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஹேமநாதன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி, இசைப்பள்ளி மாணவர்கள், அவர்களது பெற்றோர், நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்றனர். பல்வேறு வாத்தியங்கள் இசைத்தபடி பேரணியாக சென்றனர். நாட்டுப்புற கலைஞர்கள் பல்வேறு வேடமிட்டு பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us